Tamil Tips
செய்திகள் முக்கிய செய்திகள்

10th தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை அரசு கொடுக்கும் உதவித்தொகை பற்றி தெரியுமா?

அனைவருக்கும் வணக்கம் தமிழக அரசு மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தபடுகிறது. சரி இந்த திட்டத்தை பற்றி தெளிவாக படித்தறியலாம் வாங்க. 

யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:-

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம்.
  • இளங்கலை / முதுகலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்.
  • இருப்பினும் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் விவசாயம், சட்டம் போன்ற பட்ட படிப்பு படித்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
details

விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம்:-

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50,000/- க்கு மேல் இருக்க கூடாது. ரூ.50,000/- மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பெற்ற பின் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பு காலம்:-

மேல் கூறப்பட்டுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Employment Office இல் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் தாங்கள் உதவி தொகையினை பெற இயலும்.

முக்கிய குறிப்பு:–

Thirukkural

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய தொழில் ஈடுபட்டவராவோ இருந்தல் கூடாது. அதேபோல் விண்ணப்பதாரர்கள் தனியார் அல்லது அரசு துறைகளிடமிருந்து வேறு எந்த வகையிலும் உதவி தொகையினை பெறுபவராக இருந்தல் கூடாது.

இந்த உதவி தொகை பெறுவதன் மூலம் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது.

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறும் காலத்தில் பதிவை தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும்.

மேலும் இந்த Unemployed Scheme Details in Tamil முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து படிக்கவும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம்
(Notification and application)
click here
Information
Website Linkclick here
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அது தெரியுற மாதிரி புடவை கட்டினால் தானே அழகு !! வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி ஷங்கர் !!

tamiltips

ம றைந்த சித்ராவின் ம ரணத்தில் வெ ளியான தி டுக்கிடும் தகவல்! போ லிசார் ஆய்வு இதோ..!!!

tamiltips

ம றைந்த நடிகை சித்ரா வீட்டில் அவருக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா? புகைப்படம் பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்..!!

tamiltips

பிக்பாஸ் பிரபலத்திற்கு திருமணம்!! மணப்பெண் இவர்தான் யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

tamiltips

Viral video – படகு விபத்தில் நீருக்குள் மூழ்கும் சிறுவனை மீட்க போராடிய ஊர் மக்கள், மனதை உருக வைக்கும் காட்சி!

tamiltips

சென்னையை ரஷ்யா போல் உருவாக்கும் பட குழு…!ஆச்சர்யத்தில் உறைந்து போன ரசிகர்கள்…!

tamiltips