Tamil Tips
செய்திகள் முக்கிய செய்திகள்

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

ஒருவரது சொத்தை மற்றொருவர் கிரையம் முடிக்கும் போது, பட்டாவை மாற்ற தனியாக அலைய வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் அனைத்து சான்றிதல்களையும் நாம் வீட்டில் இருந்தபடியே நாமே ஆன்லைன் மூலம் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம். அந்த வகையில் ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி (patta name transfer online in tamil) என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கிரையம் முடித்தவர்கள் http://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-

  1. ஆதார் கார்டு
  2. பத்திர நகல்
  3. கம்ப்யூட்டர் சிட்டா
  4. வில்லங்க சான்றிதழ்
  5. Subdivision Patta Transfer-யில்  பட்டா பெயர் மற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான Challan போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

விண்ணப்ப கட்டணம்:-

ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய கட்டண தொகை 60 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த கட்டண தொகையை தாங்கள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய மூன்று வகையான விண்ணப்பங்கள் உள்ளன அவை:

  1. Patta Transfer
  2. Subdivision Patta Transfer
  3. Joint Patta Transfer

என மூன்று வகையான பிரிவுகள் இருக்கின்றன அவற்றில் தங்களுக்கு எந்த பிரிவில் விண்ணப்ப படிவம் தேவையோ அந்த விண்ணப்பத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Thirukkural

Patta Transfer:-

Patta Transfer என்பது ஒரே சர்வே நம்பரில் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து  முழு நிலத்தை முழுமையாக தாங்களே வாங்கி உள்ளீர்கள் என்றால் அது Patta Transfer பதிவு பிரிவில் வரும்.

Subdivision Patta Transfer:-

Subdivision Patta Transfer என்பது ஒருவர் 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் 1 1/2 ஏக்கர் அல்லது 2 ஏக்கர் நிலத்தை தாங்கள் வாங்கியுள்ளீர்கள் என்றால் அது Subdivision Patta Transfer பதிவு பிரிவில் வரும்.

Joint Patta Transfer:-

Joint Patta Transfer என்பது இரண்டு மூன்று சர்வே நம்பரில் நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கி இருந்தால் அது Joint Patta Transfer பதிவு பிரிவில் வரும்.

இந்த மூன்று வகை விண்ணப்பங்களில் தாங்கள் Subdivision Patta Transfer-யில்  பட்டா பெயர் மற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தாங்கள் செல்லான் (Challan) கட்ட வேண்டியதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் தாங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் https://www.tn.gov.in/ இணையதள பயன்பாட்டின் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

8 மாத கர்ப்பிணி மனைவியோடு நடிகர் விமல் செய்த காரியம் !! நெகிழ்ந்துபோன பொதுமக்கள் !!

tamiltips

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

tamiltips

அடடே!! விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர் கண்ணனின் தங்கை இவர் தானா.. புகைப்படம் இதோ..!!

tamiltips

நடிகர் விக்ரம் மகன் துருவன் உடன் இருக்கும் இந்த 2 பேர் தமிழ் சினிமா பிரபலங்களின் மகனா.. யாருடைய மகன் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நடிகர் மொட்டை ராஜேந்திரனின் முடிந்து போன வாழ்க்கை!! மறுபடியும் என்ன ஆச்சு பலருக்கும் தெரியாத உ ண்மை இதோ..!!

tamiltips

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

tamiltips