Tamil Tips
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி…

மதியத்தில் நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியே குழந்தைகளுக்கு கொடுக்கணுமா எனக் கவலைப்படுபவர்களா நீங்கள்… இதோ ஊட்டச்சத்துகள் மிக்க பல வகை சாதம் ரெசிபிகள்… குழந்தைகளுடன் பெரியவர்களும் இப்படி விதவிதமாக சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம். இதெல்லாம் நம் ஊர் பாரம்பர்ய அரிசி வகைகள்…

ஒவ்வொன்றும் பலவிதமான சத்துகளைக் கொண்டது. வெள்ளை அரிசி சாதம் வெறும் சக்கைதான். அதில் சத்துகள் குறைவு. ஆனால், இதில் சத்துகள் ஏராளம்.

ஆரோக்கியம் தரும் நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம்…

#1. சோள சாதம்

தேவையானவை

இரண்டாக உடைத்த சோளம் – 75 கிராம்

தண்ணீர் – சோளத்தைவிட 3 மடங்கு அதிகம்

எண்ணெய் – 2 ஸ்ஊன்

Thirukkural

இந்துப்பு – சிறிதளவு

செய்முறை

சோளத்தைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, சோளத்தைப் போட்டு, உப்பு, எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

3 விசில் வந்ததும் நிறுத்திவிடலாம்.

குழம்பு, ரசம், காய்கறி குர்மா, தயிர், மோருடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்

உடலுக்கு வலுவை சேர்க்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

ஊட்டச்சத்துகள் மிக்கது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்ற 4 வகை ஹெல்தி, டேஸ்டி பான்கேக் ரெசிபி…

solam rice

Image Source : Raks kitchen

#2. வரகு சாதம்

தேவையானவை

வரகு – 75 கிராம்

தண்ணீர் – வரகை விட 2 மடங்கு அதிகம்

எண்ணெய் – 2 ஸ்பூன்

இந்துப்பு – சிறிதளவு

செய்முறை

வரகை கழுவி கொள்ளவும்.

குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, வரகை போட்டு, உப்பு, எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

2 விசில் வந்ததும் நிறுத்திவிடலாம்.

குழம்பு, ரசம், காய்கறி குர்மா, தயிர், மோருடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவு மிதமாக சேரும்.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

இதையும் படிக்க: டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…

#3. குதிரைவாலி சாதம்

தேவையானவை

குதிரைவாலி – 75 கிராம்

தண்ணீர் – குதிரைவாலியை விட 2 மடங்கு அதிகம்

எண்ணெய் – 2 ஸ்பூன்

இந்துப்பு – சிறிதளவு

செய்முறை

குதிரைவாலியை கழுவி கொள்ளவும்.

குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, குதிரைவாலி போட்டு, உப்பு, எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

2 விசில் வந்ததும் நிறுத்திவிடலாம்.

குழம்பு, ரசம், கீரை கூட்டு, காய்கறி குர்மா, தயிர், மோருடன் சாப்பிட ஏற்றது.

தக்காளி சாதமாகவும் சாப்பிட ஏற்றது.

பலன்கள்

நார்ச்சத்து நிறைந்தது.

மலச்சிக்கல் நீக்கும்.

இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…

saamai rice

Image Source : kitchen rhapsody

#4. சாமை சாதம்

தேவையானவை

சாமை – 75 கிராம்

தண்ணீர் – சாமையைவிட 2 மடங்கு அதிகம்

எண்ணெய் – 2 ஸ்பூன்

இந்துப்பு – சிறிதளவு

செய்முறை

சாமையை கழுவி கொள்ளவும்.

குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, சாமை போட்டு, உப்பு, எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

2 விசில் வந்ததும் நிறுத்திவிடலாம்.

தயிர் போட்டு சாப்பிட ஏற்றது. மிகவும் சுவையாக இருக்கும்.

குழம்பு, ரசம், கீரைக் கூட்டு, காய்கறி குர்மா, தயிர், மோருடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்

சாமை சாப்பிட்டால் ஆமை ஆயுள் என்பார்கள்.

ஆரோக்கியத்தைத் தரும் நீண்ட ஆயுள் நோயின்றி வாழலாம்.

இதையும் படிக்க: சிறுதானியங்களில் உள்ள சத்துகளால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்கள்… எப்போது சிறுதானியம் தரலாம்?

millets rice

Image Source : Youtube

#5. கோதுமை சாதம்

தேவையானவை

இரண்டாக உடைத்த கோதுமை – 75 கிராம்

தண்ணீர் – கோதுமை அளவைவிட 2 மடங்கு

எண்ணெய் அல்லது பசு நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

கோதுமையை கழுவி கொள்ளவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் உடைத்த கோதுமையை போடவும்.

3 விசில் வரை வேகவைத்து எடுக்கலாம்.

இந்தக் கோதுமை சாதத்துடன் சாம்பார், கூட்டு, கீரை பருப்பு மசியர், காய்கறி குர்மா, ரசம், தயிர், மோர் என எது வேண்டுமென்றாலும் கலந்து சாப்பிடலாம்.

பலன்கள்

மிகவும் சத்தான வகை சோறு இது.

புதுமையான சுவையுடன் இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்தது.

இதையும் படிக்க: குழந்தையை பலசாலியாக்கும் 10 வகையான நம் ஊர் அரிசி வகைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இயற்கை வயாகரா முருங்கை கீரை (murungai keerai) பயன்கள்! கீரை சூப் செய்யலாமா?!

tamiltips

கைக் குழந்தையோடு பயணமா?இதோ 15 சூப்பர் டிப்ஸ் !!

tamiltips

தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்…

tamiltips

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

tamiltips