Tamil Tips
குழந்தை பெற்றோர்

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது… இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்க்கலாம்.

சின்ன குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது.

அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது.

12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது.

1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம்.

Thirukkural

ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்.

குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம்.

குழந்தையின் கண் பார்த்துப் பேசுங்கள்.

குழந்தையை பார்த்து புன்னகை செய்யுங்கள். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள்

கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம்.

குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம்.

குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.

பெரிய குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…

வலியில் இருந்து மீள ஆழ்ந்த மூச்சு விடும்படி சொல்லி கொடுங்கள்

பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி குழந்தையை தயார்படுத்துங்கள்.

அறையில் உள்ள பொருட்களைக் காண்பித்து குழந்தையின் கவனத்தை மாற்றுங்கள்.

அழும் குழந்தையை சமாதானம் செய்யுங்கள்

குழந்தை பயப்படுகிறது எனத் திட்ட வேண்டாம். கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.

after vaccination baby care

Image Source :  The local Italy

இதையும் படிக்க: தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

தடுப்பூசி போட்ட பின்…

மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும்.

காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும்.

தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான்.

கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.

பொதுவான பின் விளைவுகள்

தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல்.

ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம்.

எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.

தடுப்பூசி போட்டவுடன் வரும் காய்ச்சலை கண்காணிக்க…

குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள்.

அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம்.

டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம்.

ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.

இதையும் படிக்க:  0-5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள்…

காய்ச்சலை குணப்படுத்த…

குறைவான காய்ச்சல் (37.4 – 38C)

லேசான ஆடையை அணிவியுங்கள்.

பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள்.

மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும்.

நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள்.

காய்ச்சல் (Over 38 – 38.9C), அதிக காய்ச்சல் (39C or higher)

காய்ச்சலுக்கான மருந்துகளை, மருத்துவர் பரிந்துரைப்படி கொடுக்கவும்.

லேசான ஆடையை அணிவியுங்கள்.

பெரும்பாலான துணிகளை நீக்கிவிடுங்கள்.

மின்விசிறி உள்ள அறையில் குழந்தையை படுக்க வையுங்கள். காற்றோட்டம் இருக்கட்டும்.

நீர்ச்சத்து உணவுகளைக் கொடுங்கள்.

பெட்ஷீட் போர்த்த வேண்டாம்.

மிகவும் அரிதாக வரக்கூடிய பிரச்னை…

மூச்சுவிடுவதில் சிரமம்

விழுங்குவதில் சிரமம்

after vaccination baby care

Image Source : ABC

இதையும் படிக்க:  குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்…

தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.

உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல்

அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்)

பலவீனமாகுதல்

தூக்கம் இல்லாமல் இருப்பது

தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது

சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை

3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது

சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது

சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல்

உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல்

வயிறு வீக்கம்

மலத்தில் ரத்தம் வருதல்

அடிக்கடி வாந்தி எடுத்தல்

48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்

உணவுகள்…

அரிசி கஞ்சி, சிறுதானிய கஞ்சி வகைகள்

தாய்ப்பால்

பழக்கூழ் கொடுத்தல்

இளஞ்சூடான தண்ணீரில் தயாரித்த ஜூஸ்

சூப் வகைகள்

இட்லி, ஸ்டீம் தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற லேசான உணவுகள்

ரசம் சாதம்

தண்ணீர், ஜூஸ் எனத் திரவ உணவுகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

tamiltips

குழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்?

tamiltips

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

tamiltips

குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் 20 உணவுகள்…

tamiltips

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

tamiltips

குழந்தையின் காது, நாக்கு, வாய், நகம்… சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி?

tamiltips