Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றுகிறதா? எளிதில் விரட்டும் வழிகள் இதோ!

எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். இந்த எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களுடன் நாம் பழகும் போது நம்மை நல்லவைகளுடன் அவை ஒட்டாமல் செய்து விடும்.

அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும்.எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு நீக்கலாம் என்று பார்ப்போம். 

தியானம்: தியானமோ, யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதாரணமாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தைப் போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புன்னகை: கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாகத் தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். உங்கள் இறுக்கம் குறைந்து தசை நார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பை விட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

நண்பர்கள்: முடிந்தவரை நேர்மையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

Thirukkural

நேர்மறைக்கு மாற்றுதல்: சிரமங்களைப் பற்றியும் கஷ்டங்களைப் பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்து பாருங்கள்.

குறை கூறாதீர்கள்: உங்களைப் பற்றியோ, மற்றவர்களைப் பற்றியோ குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரி செய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். அதை சரிசெய்ய முடியாத போது உங்கள் பாதையைத் தீர்மானித்து பயணியுங்கள். நல்லதே நடக்கும்.

மற்றவர்களுக்கு உதவுங்கள்: எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசை திருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை. அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளை விடத் தொடங்கும்.

விலகி விடுங்கள்: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. தவறுகளே செய்து கொண்டு இருப்பவன் மனிதர்களாக இருக்க இயலாது. அப்போது அதனை தடுக்க முடியாமல் போனால் விலகி விடுங்கள். அந்த தீமைகளும் மறந்து நடந்தது அனைத்தும் நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர் கொள்ளும் பொழுது அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

பாடுங்கள்: உங்களுக்குத் தெரிந்த ஏதாவது பாடலை முணுமுணுக்கத் துவங்குங்கள். அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

நன்றி கூறுங்கள்: நல்ல மக்களுடன் பழகுங்கள். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

நல்லதை படியுங்கள்: தினமும் காலையில் நீங்கள் செய்தித்தாள் படிப்பவராக இருந்தால் எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள்.. முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். நல்ல ஆன்ம நன்பர்களுடன் நல்லிணக்கம் கொள்ளுங்கள். அது எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும். உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும். உங்கள் செயல்களைக் கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும். உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும். உங்கள் குணத்தைக் கவனியுங்கள் அது தலைவிதியை அது மாற்றக் கூடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்னு தெரியாம தாய்க்கு கவலையா ?

tamiltips

வீசா இல்லாமல் பயணிக்கக்கூடிய பத்து நாடுகள் ! நீங்கள் சற்றும் எதிர் பார்க்காத 3வது நாடு! ருசிகர தகவல்கள் இதோ!

tamiltips

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

tamiltips

கீரை சமைப்பதில் இத்தனை சமாச்சாரம் இருக்கிறதா? இன்னும் நிறைய சமையல் டிப்ஸ்!

tamiltips

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

tamiltips

யார் யார் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? ஒவ்வொருவரும் படித்து பின்பற்ற வேண்டிய அறிவியல் பதிவு!

tamiltips