Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

ஊரடங்கை ஒரே ஒருநாள் மட்டும் நிறுத்தி வையுங்கள்… கெஞ்சிய இளைஞரிடம் வாக்குறுதி அளித்த எடப்பாடி..!

ஊரடங்கில் இருந்து ஒரு நாள் விலக்கு கொடுக்க வேண்டும் என அனுமதி கேட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டிலேயே அதிகம் பாதிப்பு உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதேபோன்று மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 2 வது இடத்தில் உள்ள தமிழக அரசு பிரதமர் அறிவிப்பதை ஏற்று வழி நடப்போம் எனக் கூறி உள்ளார்.

Thirukkural

இந்நிலையில் ஃபயாஸர்ஷி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சார் தயவு செய்துஒரு நாள் மட்டும் ஊரடங்கில் இருந்து கேப் கொடுங்க ப்ளீஸ். என் மனைவி 9 மாத கர்ப்பினியாக இருக்கிறார். அவளுக்கு யாருமே இல்லை. நான் பக்கத்து  மாவட்டத்தில் மாட்டிக் கொண்டேன். இது முதல் பிரசவம். தனியா அவளால் பார்த்துக் கொள்ள முடியாது. 108க்கு போன் செய்தால் கூட கூடவே யாராவது இருக்கணும். பேருந்துக்கு விண்ணப்பித்தும் ரெஸ்பான்ஸ் இல்ல. இது மெடிக்கல் எமெர்ஜென்ஸி இல்லையா? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திருமணம் முடித்த பின்னரும் இளைஞருடன் குத்தாட்டம் போட்ட நடிகை சிம்ரன்.! லீக்கான காட்சி அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்.!

tamiltips

நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

tamiltips

தனது பானை வயிறு குலுங்க குலுங்க செம்மையா குத்தாட்டம் போட்டு கலக்கிய நபர்! மில்லியன் பேர் பார்த்த வைரல் காட்சி

tamiltips

தங்கைக்கு தாயான அண்ணன்…!எத்தனை கோடி கொடுத்தாலும் இப்படி ஒரு பாசம் யாருக்கும் கிடைக்காது…!

tamiltips

உயிருக்கு போராடிய குட்டி குரங்கு… தனது தாயிடம் சேர்ந்தது எப்படி? 1 கோடி பேரை கலங்க வைத்த காட்சி

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips