Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை குறைஞ்சுபோச்சு! இனியும் வெயிட் பண்ணாதீங்க!

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது.

இந்த மாதம் 1ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் விலையானது 31 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று இறக்கம் காணப்பட்டு தான் வருகிறது. இதையடுத்து, இன்றும் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,855 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,840 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,692 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,536 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,658 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,264 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,821 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,568 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Thirukkural

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 6.11.2019 – 1 grm – Rs. 3821/-, 8 grm – 30,568/- ( 24 கேரட்) 6.11.2019 – 1 grm – Rs. 3658/-, 8 grm – 29,264/- (22 கேரட்) வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.10 ஆகவும் கிலோ ரூ.49,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் முகப்பொலிவுக்காக அதிகம் செலவு செய்கிறீர்களா? இந்த ஒரு பொருள் மட்டும் போதுமே!

tamiltips

சுருக்கம் இல்லா முகத்தோடு என்றும் இளமையை தக்கவைத்துகொள்ள இந்த எண்ணெய் போதும்!

tamiltips

தொப்பையை குறைக்கவே முடியவில்லையா?கொள்ளு சாப்பிட்டால் கண்டிப்பா முடியும் !!

tamiltips

CRPF வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்! அள்ளிக் கொடுத்த சத்குரு!

tamiltips

பிரசவ நாளைக் கணக்கிடுவது எப்படி? சிம்பிள் வழி!!

tamiltips

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

tamiltips