சூடான உணவுப் பொருளால் வெந்து போன நாக்கை விரைவில் சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் உள்ளன.
வெஜிடேபிள் கிளிசரினை நாக்கில் தடவி, சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவுங்கள்.இல்லாவிட்டால் கற்றாழை ஜெல்லை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து, பின் அதை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.இல்லாவிட்டால் கிளிசரின் வகை மௌத் வாஷைக் கொண்டு ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளியுங்கள்.
நாக்கில் உள்ள காயத்தை சரிசெய்ய வெதுவெதுப்பான உப்பு நீரை வாயில் ஊற்றி 30 நொடிகள் கொப்பளித்து, பின் துப்புங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், நாக்கில் உள்ள புண் குணமாகிவிடும். தேனை நாக்கில் தடவி சிறிது நேரம் உட்காருங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள். நாக்கு வெந்து போய்விட்டால், சுவைமொட்டுக்கள் பாதிக்கப்பட்டு, உணவின் சுவை தெரியாமல் போகும்