·
குழந்தை மாலை போட்டுக்கொண்டிருந்தால் சுகப்பிரசவம் சாத்தியம் இல்லை என்று பெரியவர்கள் சொல்வது உண்மைதான்.
·
அதாவது தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் மாலை போன்று சுற்றிக்கொண்டிருந்தால் சுவாசிப்பதில் சிக்கல் வரும் என்பதால் சிசேரியன் தேவைப்படும்.
·
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுப்பதுதான் நல்லது.
·
குழந்தை வயிற்றுக்குள் சுற்றும்போது, தலை கீழே வரமுடியாதபடி ஏதேனும் ஒர் கோணத்தில் சிக்கிக்கொள்வதுண்டு. இந்த நிலையிலும் சிசேரியன் செய்வதே நல்லது.
சுகப்பிரசவம் மூலம் பிறந்த குழந்தைக்கும் சிசேரியன் மூலம் வெளியே வந்த குழந்தைக்கும் பொதுவாக எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. தாய்க்கு மட்டும்தான் கூடுதல் சிரமம். அதனால் சிசேரியனைக் கண்டு அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை.