இந்நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 7 போனை தொடர்ந்து ரெட்மி நோட் 7 ப்ரோ வை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே இதன் விலை தான்.
இது முந்தய மாடல் மொபைல் போனை மிகவும் விலை குறைவு இதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என்பது தான் ஒரிஜினல் ரெட்மி நோட் 7 ஹார்டுவேரை அடிப்படையாகக் கொண்டே ரெட்மி நோட் 7 ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.3 இன்ச் டிஸ்பிலே கொண்ட இந்த போன் , இரட்டைநானோ சிம் வசதியை கொண்டுள்ளது . மேலும் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல்மெமரியும் கொண்டுள்ள போன் 13,999 ரூபாய் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல்மெமரியும் கொண்டுள்ள போன் 16,999 ரூபாய் ஆகவும் விற்பனையாகப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி திறண் 4000 எம்.ஏ.எச் ஆகும்.
கேமராவை பொறுத்தவரையில் 48 மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மியின் மற்ற மாடல்களை ஒப்பிடும் போது இதன் கேகேமிரா சென்சார் முற்றிலும் வேறுபட்டது இதற்காகவே பிரத்யேகமாக Samsung ISOCELL GM1 Ultra Clear sensor உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புறத்தில் 5 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.