Tamil Tips
பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?

சில பெண்களுக்கு மாதவிலக்கு பெரும் பிரச்னை. சிலருக்கு வந்ததும் போவதும் தெரியாத நிலை. மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி, மாதவிலக்கு பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பல பெண்களுக்கு 40 வயது கடந்த பிறகு, மாதவிலக்கு தொடர்பான பிரச்னை அதிகமாக வருகிறது. இதைத் தவிர்க்க சில விஷயங்களை பின்பற்றுவதும் தவிர்ப்பதும் அவசியம்.

மாதவிலக்கான பெண்கள்… எதை செய்யலாம்? எதைத் தவிர்க்கலாம்?

குதித்து விளையாடலாமா… வண்டி ஓட்டலாமா…

மாதவிலக்கான நேரங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது. மீறி செய்தால் கருப்பையானது தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உள்ளது.

குதித்து விளையாடினால் கருப்பைத் தசைகள் இறுகி, கர்ப்பப்பையின் மடிப்புகளில் ரத்தம் உறையலாம்.

Thirukkural

கர்ப்பப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து, கட்டிகள், வீக்கம், திசு சிதைவு ஆகியவை ஏற்படலாம்.

மாதவிலக்கு காலத்தில், கர்ப்பப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் அவசியம். இதற்கு, பெண்களின் பிற உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும். இதனால்தான் மாதவிலக்கானப் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

வீட்டின் சுகாதாரம் முக்கியம்

மாதவிலக்கான பெண்கள் உள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூங்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ ரத்தப்போக்கின் வாசத்தை பூச்சிகள் அறிந்து, கடித்துப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

rest during menstruation

ஓய்வு ஏன் அவசியமாகிறது?

 • பெண்ணின் உடலானது, கருப்பையைக் கருத்தரிப்பதற்கு ஏதுவாக, “என்டோமெட்ரியம்” என்னும் சவ்வை கரைத்து, வளர வைத்து, பக்குவப்படுத்திக் கொள்கிறது.
 • மாதவிலக்கு ஏற்படும் போது 35-40 மி.லி ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
 • நீர்ச்சத்து, புரதம், ரத்தம், சளிச்சவ்வு, உப்புகள், எண்டோமெட்டிரிய திசுக்கள் ஆகியன கலந்த கருஞ்சிவப்பு நிற திரவமாக ரத்தம் வெளியேறும்.
 • மன அமைதியுடன் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3-4 நாட்கள் சீரான ரத்தப்போக்கு ஏற்படும்.
 • மாதவிலக்கு காலத்தில் ஓய்வெடுத்தால், கர்ப்பப்பை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களும் நன்கு உற்பத்தியாகின்றன.
 • மாதவிலக்கு காலத்தில் ஓடலாம், குதிக்கலாம், விளையாடலாம், வண்டி ஓட்டலாம் என விளம்பரம் செய்கின்றனர். இப்படியெல்லாம் செய்தால் ரத்தப்போக்கில் மாறுதல் ஏற்படுவதுடன், கர்ப்பப்பை தசைகள் திடீர் இறக்கத்தால் வீங்கி, கர்ப்பப்பைப் பெரிதாகின்றன.

இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

சானிடரி நாப்கின் பயன்படுத்தலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினை செலவு செய்து வாங்குவதை விட பருத்தி துணியை 8-ஆக மடித்து நாப்கின் போல பயன்படுத்துவது நல்லது. இதை சித்த மருத்துவத்தில் ‘பொட்டணம் கட்டுதல்’ எனச் சொல்வார்கள்.

தீவிரமான ரத்தப்போக்கை தவிர்க்க, மாசிக்காய், காசுக்கட்டி, கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை இடித்து, பொடித்து துணியில் முடிந்து கர்ப்பப்பை வாசலில் வைக்க ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும் பிறப்புறுப்பில் தோன்றும் அரிப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன நிற்கும்.

இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது?

மாதவிலக்கான பெண்கள்… செய்ய கூடாதவை… செய்ய வேண்டியவை…

மாதவிலக்கு நாட்களில் தாம்பத்ய உறவு, பகல் தூக்கம், கண்களில் மையிடுதல், வாசனைத் திரவியம் பயன்படுத்துவது, நகம் வெட்டுதல், குதித்தல், ஓடுதல் ஆகியன செய்ய கூடாது.

மாதவிலக்கான நாட்களில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்தால், ரத்தப்போக்கு நின்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், மாதவிலக்குக்கு பின் 4-ம் நாளில் இளஞ்சூடான வெந்நீரில் தலைக்கு குளிப்பது நல்லது.

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

மாதவிலக்கான பெண்கள் என்ன சாப்பிடலாம்?

ulud kali for women

Image Source : Malaimalar

 • மாதவிலக்கான நாட்களில் பெண்களுக்கு கொழுப்பும், புரதமும் தேவையான அளவு கிடைத்திட வேண்டும்.
 • கருப்பு உளுந்தைப் பொடித்து மாவாக்கி, களிபோல் கிண்டி, தேவையான நல்லெண்ணெய் சேர்த்து, இளஞ்சூடாக 4-5 உருண்டைகளாக பெண்கள் சாப்பிட வேண்டும். இதனால் விட்டமின் இ கிடைக்கும். அமினோ அமிலங்களும் கிடைப்பதால், இடுப்பு எலும்புகள் பலம் பெறும்.
 • அரைக்கீரை விதைகளைப் பொடித்து, 1-2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, நல்லென்ணெயுடன் குழைத்து சாப்பிட்டால் இரும்புச்சத்து கிடைக்கும்.
 • பெண்களே மாதவிலக்கின் போது குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும். பிரயாணம் செய்தல், படி ஏறி இறங்குதல் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
 • சீரான ரத்தப்போக்கு, சீரான மாதாந்திர சுழற்சி, ஆரோக்கியமான கர்ப்பப்பை, இயற்கையான முறையிலே கருத்தரித்தல், சுகப்பிரசவம், பிரச்னை இல்லாத மெனோபாஸ் இப்படி அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்றால் மாதவிலக்காகும் 4 நாட்களில் 18 மணி நேரம் ஓய்வெடுத்தாலே இவையெல்லாம் சரியாக நடக்கும்.

இதையும் படிக்க: 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

Source: ஆயுஷ் குழந்தைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?

tamiltips

குழந்தையின் காது, நாக்கு, வாய், நகம்… சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி?

tamiltips

எந்த கருத்தடை பாதுகாப்பானது? ஆண், பெண்ணுக்காக கருத்தடை சாதனங்கள் என்னென்ன?

tamiltips

நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

tamiltips

குளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?

tamiltips

பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

tamiltips