Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது.

இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், இதன் வேரே, மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிவனார் வேம்புவின் பொதுவான குணங்களாக, உடல் எரிச்சல், கட்டிகள், நச்சுக்கள் இவற்றைப் போக்கி, உடலை வலிவாக்கும் ஆற்றல் மிக்கது. அல்சர் எனும் குடல் புண்ணை சரிசெய்யும் ஆற்றல் மிக்க சிவனார் வேம்பு, பல்வேறு சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது.

பெயரில் தான் வேம்பு இருக்கிறதே தவிர, சிவனார் வேம்பு மூலிகைச் செடிக்கும், வேம்பு என அழைக்கப்படும் வெப்ப மரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, மூலிகைகளின் மகத்தான நன்மைகள் கருதி, வேம்பின் பெயரை சில மூலிகைகளுக்கு, நில வேம்பு, சிவனார் வேம்பு என்று குறிப்பிட்டு வழங்கியிருக்கின்றனர், முன்னோர்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் ஆயுள் நீட்டிப்பு தரும் சிவனார் வேம்பு சூரணம்: சிவனார் வேம்பு செடியை பூக்கள், காய்கள் இலைகள் மற்றும் வேர்த்தண்டுடன் எடுத்துக்கொண்டு, நிழலில் உலர்த்தியபின்னர், நன்கு இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, இந்த சிவனார் வேம்பு பொடியை,

Thirukkural

தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதே அளவில் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து, சிறிது பாலில் குழைத்து பருகிவர, உடல் நலனை சரிசெய்து, மனிதரின் ஆயுளை நீட்டிக்கவல்லது இந்த சிவனார் வேம்பு மூலிகை, அது மட்டுமல்ல, மேலும், இதுவே, தொழு வியாதிகள் போன்ற கடுமையான வியாதிகளுக்கும் மருந்தாகிறது என்கின்றனர் பெரியோர்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் தலைப்புண்களை ஆற்றும் சிவனார் வேம்பு சிவனார் வேம்பு செடியை தீயில் இட்டு, உண்டாக்கிய சாம்பலை, தேங்காயெண்ணையில் கலந்து, தலையில் ஏற்பட்ட சிரங்கு, உடலில் உள்ள சொறி சிரங்கு போன்றவற்றில் தடவி வர, அவை விரைவில் சரியாகும்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் சிவனார் வேம்பு தைலம் சிவனார் வேம்பு சூரணத்துடன் அருகம்புல் சேர்த்து, தேங்காயெண்ணையில் இட்டு காய்ச்சி வர, எண்ணை நன்கு இறுகி, தைலப் பதத்தில் வந்ததும், அதை, உடலில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், சொறி சிரங்கு படை போன்ற சரும பாதிப்புகளுக்கும் தடவி வர,

அவை விரைவில் குணமாகும். மேலும், அழுகிய நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது.சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் சிவனார் வேம்பு இலை மருத்துவம் :

கைப்பிடி அளவு சிவனார் வேம்பு இலைகளை நன்கு அலசி, நீர் போக உலர்த்தி, அந்த இலைகளை நன்கு மையாக அரைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளின் மீது தடவி வர, கட்டிகள் யாவும் உடைந்து விடும், சிலருக்கு கட்டிகள் உடையாமலேயே குணமாகி, மறைந்து விடும்.

சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் சிவனார் வேம்பு ஆடாதோடை மருந்து. சிவனார் வேம்பு இலைகள் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது ஆடாதோடை இலைகளைச் சேர்த்து, நன்கு அலசி, அம்மியில் இட்டு மையாக அரைத்து அந்த விழுதை, சிறிய எலுமிச்சை அளவில் தினமும் சாப்பிட்டுவர,

உடலில் சேர்ந்த நச்சுக்கள் மற்றும் விஷப்பூச்சிகள் நச்சுக்களால் ஏற்படும் உடல் அரிப்பு, சொறி, சிரங்கு மற்றும் உடலின் உள்ளே ஏற்படும் கட்டிகளை ஆற்றி, மேற்குறிப்பிட்ட உடல் நல பாதிப்புக்கள் அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் மிக்கது. இந்த மருந்து சாப்பிட்ட பின், தேவைப் பட்டால், சிறிது வெந்நீர் பருகலாம்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் சிவனார் வேம்பு வேரின் நற்பலன்கள் சித்த மூலிகை நாயுருவி வேரைப் போல, தேவ மூலிகை சிவனார் வேம்பின் வேரைக் கொண்டும் பல் துலக்கி வர அல்லது வேரை நன்கு மென்று நாரைத் துப்ப, பல் வலி, ஈறு வீக்கம் பாதிப்புகள் குணமாகி, வாய்ப் புண்களும் ஆறி விடும்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் சிவனார் வேம்பு தேநீர் சிவனார் வேம்பு வேரை நன்கு அலசி அத்துடன் சிறிது ஜீரகம், சிறிது இந்துப்பு சேர்த்து, கால் லிட்டர் நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை பருகி வர, ஈறுகளின் வீக்கத்தைப் போக்கும், வாயில் உள்ள புண்களை ஆற்றும், உடல் சீரண உறுப்புகளை ஊக்குவித்து,

நன்கு செயல்பட வைக்கும், தாடையில் ஏற்படும் வலியையும் போக்கும். சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம்

#சருமவியாதிகளின்வலி :சிவனார் வேம்பு வேர்த் துண்டுகளை, சிறிது பரங்கிப்பட்டை பொடி சேர்த்து, நீரில் நன்கு காய்ச்சி, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, பாலில் கலந்து பருகிவர, சரும வியாதிகளால் ஏற்பட்ட வலி மற்றும் சருமத்தில் ஏற்பட்ட வீக்கத்தை குணப்படுத்திவிடும்.

இதுவே மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கதாகவும், நச்சு கிருமிகளை வெளியேற்றி, சொரியாசிஸ் போன்ற சரும வியாதிகளை போக்கக் கூடியதாகவும் செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம்  இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைய சர்க்கரை பாதிப்புக்கு காரணமாகக் கருதப்படும் ஆலைச்சர்க்கரை, நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள் போன்றவற்றை நிறுத்திவிட்டு, சிலர், நாங்கள் சர்க்கரை பாதிப்பைத் தரும் அவற்றை சாப்பிடுவதில்லை, ஆயினும்,

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய வில்லையே என்று வேதனைப் படுவர். தற்காலம், அவற்றை நிறுத்தி இருந்தாலும், இதற்கு முன்னர் உட்கொண்டதனால் ஏற்பட்ட நச்சுக்கள் உடலில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை, அதனாலேயே, பாதிப்புகள் உடலில் நீடிக்கின்றன,

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் #வேம்பு_வேர் :சிவனார் வேம்பு வேரை நன்கு அலசிக் கொண்டு, நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை இருவேளை தினமும் பருகி வர, உடலில் உள்ள நச்சுக்களை, உடனே வெளியேற்றும் தன்மை மிக்கது, மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, இரத்த ஓட்டத்தை தடையின்றி இயங்க வைக்கும். இந்தத் தன்மைகளால், சர்க்கரை பாதிப்புகள் உடலில் இருந்து அகன்று விடும்.

சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம் #காயத்தழும்பிற்கு :இதே போல, சிலருக்கு, காயங்கள் அல்லது தீப்புண்களால், சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறையாமல் இருந்துகொண்டு, பார்ப்பதற்கு விகாரமாக இருந்து வரும். இந்த தழும்புகளை போக்கி, சருமத்தை சரிசெய்யும் ஆற்றல் மிக்கது, சிவனார் வேம்பு மூலிகை.

சிவனார் வேம்பு வேரை சிறிதளவு எடுத்து, அதை சிறிதளவு தேங்காயெண்ணையில் இட்டு காய்ச்சி, எண்ணை கொதித்து தைலப் பதத்தில் வந்ததும், ஆறவைத்து எடுத்துக்கொண்டு, தழும்புகள் உள்ள இடங்களில் தினமும் தடவி வர, நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோடையின் கொடூரத்திலிருந்து உடலை குளிர்விக்க என்ன வழி?

tamiltips

சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

tamiltips

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips

கரப்பான் பூச்சிக்குப் பயப்படுபவரா நீங்கள்?இதோ உங்களுக்குத்தான் ஆலோசனை!!

tamiltips

வைரல் வீடியோ! உரிமையாளருடன் சேர்ந்து சினிமா வசனத்துக்கு டிக் டாக் வீடியோ செய்த நாய்!

tamiltips

ஒரு வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென ரூ.400 குறைவு..! இன்னும் குறையுமா?

tamiltips