இதில்
கொழுப்பு, புரதம், மாவுச்சத்து, நியோசின், தியாமின் மற்றும் வைட்டமின் சி, ஏ உள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் மயக்கம், பித்தம், தலைச்சுற்று ஆகிய பிரச்சினைகளை எலுமிச்சை தீர்க்கவல்லது. இது வெயிலால் ஏற்படும் தாகம், நீர்க்கடுப்பு, தலைச்சூடு இவைகளை நீக்கும். தலைவலி வாந்தி, குமட்டல் போன்றவைகளை நிறுத்தும். அஜீரணம்,
வயிற்று உப்புசம், மற்றும் பல வயிற்றுப் பிணிகளை குணப்படுத்தும்.
எலுமிச்சை
சாற்றை சுடுநீரில் கலந்து குடித்தால் அஜீரணம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் தீரும்.
எலுமிச்சம்
சாற்றை மூக்கில் தேய்த்து உறிஞ்ச
மூக்கிலிருந்து ரத்தம்
வருவது நிற்கும் எலுமிச்சைத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். மேலும் தேநீரில் கலந்து குடித்தாலும் தலைவலி நீங்கும்.
எலுமிச்சம்
சாறும் நுங்கு நீரும் கலந்து உடலில் பூசினால் கோடையில் ஏற்படும் வேர்க்குரு வேனல் கட்டி வராமல் பாதுகாக்கலாம்.
எலுமிச்சை
சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து
தலையில் தேய்த்து
குளித்தால் பொடுகு நீங்கும். சூடும் தணியும்.
எலுமிச்சம்
சாற்றை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் தீரும்.
எலுமிச்சை
சாற்றை முழங்கை முழங்காலில் தேய்க்க சொர
சொரப்பு நீங்கி தோல் மென்மையாகிவிடும்.
இளநீரில்
எலுமிச்சம் சாறு கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும். எலுமிச்சம் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டால் பித்தம், அஜீரணம் நீங்கும்.
தோலில்
ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
எலுமிச்சம்
பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
கடுமையான வேலை, விளையாட்டு இவற்றால் ஏற்ப்படும் களைப்பை நீக்க எலும்மிச்சை சாறு
அருந்தினால் உடனடியாக புத்துணர்வு ஏற்ப்படும்.