Tamil Tips
ஓவுலேசன் கருவுறுதல் கருவுறுதல் கருவுறுவது எப்படி கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் குழந்தையின்மை

குழந்தை உருவாக உறவு கொள்வது எப்படி?

இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்!

செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன்.

உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ சொல்லப்படுவதும், நம்பப்படுவதுமே! முயற்சித்துப் பார்ப்பதில் எதையும் இழந்துவிடப் போவதில்லையே! முயற்சியுங்கள்; குழந்தை இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு பேரின்பமாவது கிடைக்கட்டுமே! Udaluravu kolvathu eppadi?

எதனால் உடலுறவு முறைகள் முக்கியம்?!

இந்த செக்ஸ் பொசிஷன்கள் கர்ப்பமாவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். உதாரணமாக ‘மிஷனரி’ முறையில் உடலுறவு கொள்ளும்போது, கர்ப்பம் தரிக்க புவியீர்ப்பு விசையே உதவிசெய்கிறது. இம்முறையில் ஆணின் விந்தணுக்கள் கருமுட்டையை எளிதில் அடைகிறது. இதை சில மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்!

இந்த பொசிஷன் சமாச்சாரங்களை விடவும், BMI சரியாக இருக்கவேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், கரு முட்டை வெளிவரும் ஓவுலேசன் (Ovulation) நாள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், கருமுட்டையானது பீரியட்ஸ் ஆகி 13-வது நாளில் வரலாம். இர்ரெகுலர் இருப்பவர்களுக்கு மாறுபடலாம். அதனால் அந்த ஓவுலேசன் தேதிக்கு முன்பும், பின்பும் தினசரி உடலுறவு கொள்வது பலனைத் தரும். ஏனெனில், கரு முட்டை 24 மணிநேரம் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். பெண்களுக்கு மாதத்தில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே வரும்.

Thirukkural

நிலைமை இப்படி இருக்க, உடலுறவு கொள்வது, உடலுறவு முறைகள் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன குழந்தை உருவாவதற்கு! ‘மன்மதனின்’ பல்கலைக்கழகத்தில் பல வித விதமான செக்ஸ் முறைகள் இருந்தாலும், கர்ப்பமாவதற்கு சில முறைகளை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

மிஷனரி நிலை: (Missionary position)

இது செக்ஸ் உருவான காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பழைய முறை. இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெண் கீழே, ஆண் மேலிருந்து உடலுறவு செய்யும் நிலையிது. இந்த பொசிஷன் பலருக்கும் போர் அடித்தாலும், இதில் குழந்தை உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆணின் விந்தணுக்கள் பெரிய அளவில் வீணாக்காமல், பெண்ணின் கருமுட்டையை அடையும். இதுவே, பெண் மேலிருந்து செய்யும் நிலையினில் (Women on top position), பெண்ணுறுப்பு வழியாக விந்துக்கள் வெளிவரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கரு உருவாக்க மிஷனரி நிலை சிறந்தது. இந்த நிலையில், அவள் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உடலுறவு கொண்டால் மேலும் சிறப்பாகும். குழந்தையும் வேண்டும், என்ஜாயும் வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்த உடலுறவு முறைக்குச் செல்லலாம்.

Doggy Style முறை:

இந்த Doggy Style முறை தான் பெரும்பாலான தம்பதியினரின் பிரியமான முறையாக இருக்கலாம். இதில் பெண், கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு இருக்கும்போது, ஆண் முட்டிபோட்டோ அல்லது வேறு மாதிரியோ பின்னாலிருந்து உறவுகொள்வது. இதில் ஆணின் விந்தணு மிக எளிதாக கருமுட்டையை அடைகிறது, இதனால் கரு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலும் இந்த முறையானது ‘நேரத்தை’ நீட்டிக்கும், ஆண்-பெண் இருவருக்கும் பேரின்பத்தைத் தரும் முறை என்கிற செக்ஸ் டிப்ஸையும் உங்களுக்காகத் தருகிறோம்.

அவள் கால்கள் – அவன் தோள்களில் நிலை: (Legs on Shoulders)

லவ் மேக்கிங்குடன் எண்டெர்டெயின்மென்ட் வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் இந்த Legs on Shoulders முறையை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கிப் படுத்து, தான் கால்களை தூக்கி, காதலனின் தோள்களில் வைக்க வேண்டும். காதலன், அவளருகில் முட்டிபோட்டோ, அல்லது வேறு மாதிரியோ இருக்க வேண்டும். இதில் அவள் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், செர்விக்ஸ் பகுதியின் வழியாக விந்தணு வெளியில் வருவதை தடுக்கும். இந்த முறை, விந்தணு கருமுட்டையை சேருவதில் சிரமம் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு எக்கச்சக்கம்.

ஸ்பூன் முறை உடலுறவு: (Spoon position)

இந்த முறை உங்களுக்கு பிடிக்கலாம். இதில், ஆண்-பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு இருக்கவேண்டும். குறிப்பாக ஆண், பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். பின்னாலிருந்து உறவுகொள்ளும் போது அவள் கால்கள் வி வடிவில் இருக்கலாம். எனவே விந்தணுக்கள் விரைவில் கருமுட்டையை அடையும். குழந்தைக்கான வாய்ப்பும் கன்பார்ம். இந்த முறை கொஞ்சம் ஜாலியானதும் கூட! எப்படியெனில், பின்னாலிருந்து, உடலுறவில் இருக்கும்போது கழுத்தில் முத்தம் தரலாம், முதுகில் அவன் முத்தம் வைத்தால் அவளுக்கு ஜிவ்வுனு இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! அன்பை பெருக்குங்கள்.

மேலும் சில முறைகளும் உள்ளன. உதாரணமாக Wheelbarrow, ரியர் என்ட்ரி, கேட் மற்றும் சில. அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். ஆனந்தமாய் இருங்கள். சந்தோஷம் தானே எல்லாம்?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆண்களின் ‘விந்தணு’ உற்பத்தியை இயற்கையான எளிய‌ வழிகளில் அதிகரிக்க..!

tamiltips

குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்? மருத்துவம் என்ன?

tamiltips

குழந்தை இல்லை என்ற கவலையா? இந்த மருந்து ஒன்று போதும் நீங்களும் பெற்றோர் ஆகலாம்

tamiltips

இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

tamiltips

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

tamiltips

இயற்கை வயாகரா முருங்கை கீரை (murungai keerai) பயன்கள்! கீரை சூப் செய்யலாமா?!

tamiltips