Tamil Tips
செய்திகள் முக்கிய செய்திகள்

கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் முடிவு இப்படியா இருக்கும்?

கலி முற்றும் போது உலகில் அசத்தியம் விருத்தி அடையும்.சத்தியம் முழுவதும் மறைந்துவிடும்.

மக்களிடையே பாரபட்சம் அதிகரித்து அதன்படி நடப்பார்கள்;

துரோகிகள் மிக அதிகமாகப் பிறப்பார்கள்.

ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகும்

ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

Thirukkural

பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.

பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்

மக்கள் பரமாத்மாக்களை (கடவுள்) நிந்திப்பார்கள்.

துஷ்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்;இது போன்ற விபரீதங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும்.

உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும்

உலக வாழ்க்கையில் தந்தை மகனையும்,மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.

தாய் தந்தையர்கள் மகன்களை நம்பாமல் தங்களின் மகள்களையே நம்புவார்கள்.

கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்

தெய்வ வழிபாடு செய்வோர்,தெய்வ விரதம் இருப்போர் கஷ்டமும்,தரித்திரமும் அனுபவிப்பார்கள்.

குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

வேப்ப மரத்தின் இலை இனிப்பாக மாறும்.

பகலில் நட்சத்திரம் தோன்றும்;அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.

குருவாயூரில் இருக்கும் க்ருஷ்ணன் மனிதர்களிடையே பேசுவார்.

காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்து விடும்.

காசிக் கோவிலில் இருக்கும் நடன சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று நடனம் செய்த வண்ணம்,மக்களுடனும் பேசும்.

வேதங்களும்,புராணங்களும்,சரியான முறையில் ஆன விளக்கங்கள் கூறப்படாமல்,தவறான கேலிக்குரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்படும்.

தர்ம சிந்தனையே தன் இதயத்தில் அற்றவர்கள்,குரோத குணம் உடையவர்கள்,அநியாயம்,அதர்மம்,அக்கிரமம் செய்வோர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.

மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.

வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.

உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.

உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.

பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.

விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

பெண்கள் கற்பை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்

பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்

பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்

தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

குலத்தொழில்கள் மாறுபடும்.

சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.

பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்.அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.

வேதங்களின் பொருள் மாற்றமடையும்.

வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

வேற்று மதத்தின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

எங்கும்,எதிலும் பொறாமையும்,பொச்சரிப்பும் அதிகமாகும்.

மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

கண்பார்வை மிகையாக கெடும்

எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.

உணவுப்பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.

மக்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.

செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

வெள்ளைக் காக்கைகள் காணப்படும்;அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும்.

நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னது! காமெடி நடிகர் வையாபுரியா இது? புது ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

tamiltips

நகைச்சுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? அவருக்கு இப்படி ஒரு நிலமையா…? முழுவிவரம் உள்ளே..!

tamiltips

முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!! அட இவங்க தானா இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

tamiltips

அந்த பால் பூத்தை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே !! செம செக்ஸியான லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ் !!

tamiltips

மனைவியை வி வாகரத்து செய்தார் பிரபல சீரியல் நடிகர் அசீம்! இவர் தான் அவரது மனைவியா? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நடிகை சித்ரா விஷயத்தில் நடந்தது என்ன? ஹேமந்தின் அப்பா கொடுத்த அ திரடி பேட்டியில் வெளிவந்த உண்மை..!!

tamiltips