Tamil Tips
கருவுறுதல் கருவுறுவது எப்படி கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் குழந்தையின்மை

குழந்தையில்லை என கவலைப்பட்டவர்களுக்கு, IVF ஒரு கிப்ட் ! எப்படி?!

பல இந்திய தம்பதிகளுக்கு இடையே நாளுக்கு நாள் குழந்தையின்மை சிக்கல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த இந்த IVF (ஐவிஎப்) முறை மிகச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. இன்று ஐவிஎப் முறையால் பலர் குழந்தைப் பேறு பெற்றுப் பலனடைகிறார்கள்! ஐவிஎப் என்பது உதவிகரமான இனப்பெருக்க தொழிற்நுட்பம் ஆகும். இது பெரும் அளவில் திருமணமானதாகிப் பல ஆண்டுகள் குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் உள்ள தம்பதியினர்களுக்கு உதவியாக உள்ளது.

ஐவிஎப் (IVF) சிகிச்சை முறை பலரைத் தாயாக ஆக்கி உள்ளது. இனியும் நம்மால் குழந்தைப் பெற முடியுமா என்று நம்பிக்கை இழந்த பெண்களுக்கும், நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தச் சிகிச்சை முறையில் மனைவியின் கரு முட்டை மற்றும் கணவனின் விந்தும் உபயோகிக்கப் படுகின்றன.

ஐவிஎப் சிகிச்சை முறை நடைமுறைகள் பின்வருமாறு

ஐவிஎப் முறையின் நடைமுறைப்படி (IVF Procedure Step by Step) கரு முட்டை மற்றும் விந்தணு ஒரு ஆய்வக வட்டில் வைத்துக் கருத்தரிக்கப்படுகிறது. கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பின் கருப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வளர்ச்சி அடைகிறது. கரு முட்டை மற்றும் விந்தணுவைக் கொண்டு ஆய்வகத்தில் கரு உற்பத்தி செய்யப்பட்ட பின் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து முழு வளர்ச்சி அடைவதால் இந்தச் சிகிச்சை முறை உறுதியான குழந்தைப் பேறு பெறுவதில் சிக்கல்கள் இருக்கும் தம்பதியினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. எனினும் இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி விகிதம் அந்தப் பெண் மற்றும் ஆண் வயது, உடல் ஆரோக்கியம், கருப்பையின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.

இந்தச் சிகிச்சை முறையைச் செய்து கொள்ள மனம் மற்றும் உடல் பலம் தேவை. இது ஒரு உலகளவில் வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சை முறை நடைபெற குறைந்தது 2 வாரக் காலங்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் சிகிச்சை பெரும் தம்பதியினர் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கும். பொறுமையும் திடமான மனதும் இந்த சிகிச்சையில் வெற்றி பெற பெரிதும் அவசியம்.

ஏன் ஐவிஎப் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது?

இந்தச் சிகிச்சை முறையை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் பின் வருமாறு:

Thirukkural
 • அடைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த ஃபலோப்பியன் குழாய்கள் கொண்ட பெண்களில் கருவுறாமை ஏற்படுகின்றது.
 • குறைவான விந்து எண்ணிக்கை அல்லது விந்து இயக்கத்தில் குறைபாடு கொண்ட ஆண்களில் கருவுறாமை ஏற்படுகிறது.
 • அண்டவிடுப்பில் சீர்குலைவு, கருப்பை சரியாகச் செயல்படாதது, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் ஏற்பட்டு இருப்பது போன்று சிக்கல்களைக் கொண்ட பெண்களுக்கு இந்த பிரச்சனை நிகழ்கிறது.
 • அகற்றப்பட்ட குழாய்கள்.
 • மரபணுக் கோளாறு.
 • விவரிக்கப்படாத கருவுறாமை.

இது தவிர கருவுறாமைக்கான வேறு காரணிகள் என்ன?

தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 1. வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது.பொதுவாகப் பெண்களுக்கு வயது 35 யை தாண்டி விட்ட சூழலில் இயற்கையான வழியில் கருத்தரிப்பு ஏற்படுவது சற்று சிரமமாக உள்ளது.
 2. அதிக உடல் பருமனும் கருவுறாமையை ஏற்படுத்திவிடுகிறது.
 3. வாழ்க்கை முறையில் நிலவும் மாற்றங்கள்.
 4. குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுதல்.
 5. மன அழுத்தம், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்.

இந்த காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

செயற்கை கருத்தரித்தலால் ஏற்படும் பக்க விளைவுகள்

இந்தச் செயற்கை கருத்தரித்தல் முறையால் சில உடல் உபாதைகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பே ஆகும். எனினும் அவை உங்களைப் பெரிதும் பாதிக்காது. காலப் போக்கில் அவை குறைந்து உடல் குணமடைந்து விடும். நீங்கள் தெரிந்து கொள்ளவும் மேலும் விழிப்புணர்வு பெறவும், இங்கே சில குறிப்புகள்:

• செயல்முறைக்குப் பின் சிறிய அளவிலான திரவம் (தெளிவான அல்லது இரத்தம் பிணைந்ததாக இருக்கலாம்) வெளியேறுதல்.

• லேசான வலி

• லேசான வீக்கம்

மலச்சிக்கல்

• மார்பகம் மென்மை ஆவது

• தலைவலி,அடி வயிற்றில் வலி

• எண்ணங்களில் மாற்றம்

ஐவிஎப் சிகிச்சை முறையின் வெற்றி பெரும் விகிதம்

அனைத்து வயது பெண்களும் இந்தச் சிகிச்சை முறையை முயலலாம் என்றாலும் அதன் வெற்றி பெரும் விகிதம் அவர்களது தற்போதைய வயது,உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்:

 • 35 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 41% – 43%
 • 35 – 37 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 33% – 36%
 • 38 – 40 வயதிற்குள் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 23% – 27%
 • 40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களின் வெற்றி விகிதம் 13% -18%

ஐவிஎப் சிகிச்சை முறையின் பலன்கள்

பல கருத்தரிக்கும் சிகிச்சை முறைகள் இருந்தாலும், இந்தச் சிகிச்சை முறை பலருக்கு நல்ல பலன்களைத் தருவதோடு அதிக வெற்றி விகிதத்தையும் பெற்றுத் தந்து உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தச் சிகிச்சை முறை எவ்வாறு உங்களுக்குப் பலனளிக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள்:

அனைவரும் பயன் பெறலாம்

இந்தச் சிகிச்சை முறை அனைவருக்கும் பலனளிக்கும். வயது வரம்பு மற்றும் உங்களது உடல் நிலைக்கு அப்பாற்பட்டு நீங்கள் இதை முயற்சி செய்யலாம். எனினும் இதன் வெற்றி விகிதத்தை நிர்ணயிக்கச் சில எல்லைகள் உள்ளன.

பிறரிடம் இருந்தும் முட்டை அல்லது விந்தணு பெறலாம்

இந்தச் சிகிச்சை முறையின் மற்றுமொரு பலன் என்னவென்றால், இதற்கு நீங்கள் மருத்துவரின் உதவியோடு பிறரிடமிருந்து கரு முட்டை அல்லது விந்தணுவைப் பெறலாம். இது நீங்கள் கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

ஆரோக்கியமான குழந்தை

இந்தச் சிகிச்சை முறையால் நீங்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம். இந்தச் சிகிச்சை முறையில் பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு நீங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க அனுமதி தருகிறார்கள்.மரபணு ரீதியாக ஏற்படும் பாதிப்புகளான டவுன் சிண்ட்ரோம், சிக்கல் செல் அனீமியா போன்ற குறைபாடுகளை முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம்.

அதிக வெற்றி விகிதம்

எந்த சந்தேகமும் இன்றி தம்பதிகள் நிச்சயம் இந்தச் சிகிச்சை முறையினால் நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் வெற்றி காண முடியும். இந்த முறையில் கருவுற்று தாயாவது உறுதி.

குறைந்த செலவு

இந்தியாவில் சில மருத்துவமனைகளில் ஐவிஎப் சிகிச்சையின் விலை சாமானிய மக்களும் பயன்படும் விதத்தில் உள்ளது. இதனால் அனைவரும் இந்தச் சிகிச்சை முறையால் பயன் பெறலாம். நல்ல மருத்துவமனையைத் தேர்வு செய்து தம்பதிகள் இந்த முயற்சிகளையும், சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

இறுதியான முறை

இதற்கு முன் கருத்தரிப்பிற்காக வேறு ஏதாவது வழிகளை மேற்கொண்டிருந்தால் அது பலன் தராத பட்சத்தில் இந்த முறையை மேற்கொள்ளலாம். இது ஒரு இறுதியான முயற்சி என்றாலும் எதிர்பார்த்த பலன் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கருச் சிதைவைக் குறைக்கலாம்

இந்தச் சிகிச்சை முறை கருச் சிதைவு ஏற்படுத்தாமல் உங்கள் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க உதவும்.இதனால் நீங்கள் எந்த பயமுமின்றி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

சாத்தியமான நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

வேலை அல்லது வேறு சூழ்நிலைகளில் உள்ள தம்பதிகள் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சையை மேற் கொள்ள விரும்புவார்கள். அதற்காக அவர்கள் முன்கூட்டியே மருத்துவர்களின் உதவியோடு கருமுட்டைகளைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.

தொடர்ச்சியான கண்காணிப்பு

இந்த சிகிச்சை முறையில் நீங்கள் தொடர்ச்சியாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பீர்கள். அதனால் எந்த அவசர தேவைக்கும் மருத்துவரின் உதவி உடனே கிடைக்கும். அதனால் உங்கள் ஆரோக்கிய நலனும் குழந்தையின் ஆரோக்கிய நலனும் கவனிப்பிலே இருக்கும்.

பல பலன்கள் கொண்ட இந்தச் சிகிச்சை முறை அநேக தம்பதியினர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இது குடும்பங்களில் மழலைச் செல்வம் பிறக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் பல குடும்பங்கள் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நவீன தொழிற்நுட்பம் மேலும் வளர வளர, இந்தச் சிகிச்சையின் பலன்களும் அதிகரிக்கக் கணிசமான வாய்ப்புள்ளது. தம்பதிகள் தேவைப்படும் சூழலில் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஐவிஎப் முறையின் பல்வேறு நன்மைகளைத் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கருத்தரிக்க ஆண்களும் பெண்களும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ

tamiltips

பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?

tamiltips

இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

tamiltips

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

tamiltips

ஆண் குழந்தை பிறக்க உண்ண வேண்டிய உணவுகள்

tamiltips

இயற்கை வயாகரா முருங்கை கீரை (murungai keerai) பயன்கள்! கீரை சூப் செய்யலாமா?!

tamiltips