Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இதுக்கெல்லாம் தேங்காய் எண்ணெய் வேண்டவே வேண்டாம்!

சில வகை உணவுகளை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் சமையல் எண்ணெய் மிகவும் அவசியமாகிறது. சமையல் எண்ணெய் பல வகையான உணவு பொருட்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதற்காக இந்த எண்ணெய் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும் என்று கூற முடியாது. தேங்காய் எண்ணெயாலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது.

தேங்காய் எண்ணெயின் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் :

பழங்காலத்தில் இருந்து வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் ஆயில் புல்லிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. மாறாக நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தால், அது வாயில் உள்ள பாக்டீரியாக்களை வேகமாகக் குறைக்கும்.

முகப்பரு, பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. ஆனால் அது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இல்லாதவர்களுக்கு மட்டுமே. இல்லையெனில் இது நிச்சயம் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Thirukkural

வெட்டுக் காயங்கள் குணமாவதற்கு பலரும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். ஆனால், வெட்டு ஏற்பட்ட உடனேயே தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே உடனே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காயம் ஆறும் நிலையில் தேங்காய் எண்ணெயை உபயோகித்தால் விரைவில் காயம் ஆறிவிடும்.

குழந்தைக்கு ஹைப்போ தைராய்டு என்றால் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு இது கடுமையான அலர்ஜியை ஏற்படுத்தும்.

உணவுகளை பொரிக்க செய்வதற்கு தூய்மையாக்கப்படாத தேங்காய் எண்ணெயைக் கொண்டு பொரிக்காதீர்கள். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டு உணவுப் பொருட்களை பொரிக்க செய்வதே சிறந்தது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? பூண்டு டீ குடிச்சுப்பாருங்க அதிசியத்தை!

tamiltips

மிரட்டும் கொரானா! ஒரே நாளில் 41 பேர் பலி! நாடு முழுவதும் பீதி!

tamiltips

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

tamiltips

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

tamiltips

கண்ணை சுற்றி வரும் கருவளையம் உங்கள் முக அழகையே கெடுக்கிறதா? இதோ தீர்வு !

tamiltips

தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடலாமா? கூடுதல் மருத்துவப் பயன் கிடைக்குமா?

tamiltips