Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஐஸ் பேசியல் போட்டு பாருங்கள்! மேக்கப் போட்ட மாதிரி முகம் ஜொலிக்கும்!

உங்களுக்கு சில நிமிடங்களில் பொலிவு மிக்க சருமத்தை அளிக்க கூடிய திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த பொருளாக பனிக்கட்டி இருக்கிறது. ஆனால், நீங்கள் எப்போதாவது உங்கள் சருமத்திற்கு பனிக்கட்டி பேசியல் அளித்துக்கொள்ளலாம்.

ரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்கவும். 2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்றவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்கவும்.

இதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்றவும்.பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ளவும்.

உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவவும். இவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்யவும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்றவும். பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ளவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் கொளுத்துவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

tamiltips

சர்க்கரை வியாதி இருந்தால் என்ன தான் சாப்பிடுவது? பேரிச்சம் பழம் கூட சாப்பிடக்கூடாதா?

tamiltips

இட்லி போர் அடித்து விட்டதா?, கவலை வேண்டாம், அதை இப்படி போண்டாவாகச் செய்து பாருங்கள்

tamiltips

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

tamiltips

அசைவ உணவு ஆபத்தா? அசைவத்தை பற்றிய முழு தகவல்!

tamiltips

மின்னும் முகப்பொலிவை வீட்டிலிருந்தப்படியே பெற சில பேஷியல் டிப்ஸ்!

tamiltips