பொதுவாக அந்தரங்கம் – தாம்பத்யம் என எடுத்துக் கொண்டால் அதில் ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை உள்ளது. சம பொறுப்புகளும் உள்ளது. தாம்பத்யத்தில் ஆண் தான் பெரியவன் ஆண் கூறுவதைத்தான் பெண் கேட்க வேண்டும் என்று கூறி வைக்கப்பட்டுள்ளது சுத்த பத்தாம் பசலித்தனம்.
ஏனென்றால் தாம்பத்யத்தை பொறுத்தவரை பெண்கள் தான் மிக முக்கியமானவர்கள், அதாவது ஆண்களைப் போல. சொல்லப்போனால் தாம்பத்யம் என்பது இரு மனம் இணைந்தால் தான் இனிக்கும். எனவே இங்கு யார் பெரியவர், யார் ஆண், யார் பெண் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.
ஒருவர் மனம் கோணாமல் இன்னொருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைவது தான் தாம்பத்யம். மேலும் தாம்பத்ய விவகாரத்தில் செய்யக்கூடாதது, செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. அந்த நேரத்தில் தோன்றுவதை துணையின் விருப்பத்துடன் செய்வது தான் சிறந்தது.
எனவே விருப்பம் இல்லாத விஷயத்தில் துணையை கட்டாயப்படத்தினால் அது இனிக்காது. அதே சமயம் துணை சில விஷயங்களை பிடிக்காது என்று நடிக்க கூட செய்யலாம். அதனை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப நடப்பது சிறப்பான பலனை தரும்.
தமிழகத்தை பொறுத்தவரை தாம்பத்யம் என்பது ஆண்களின் ஆதிக்கம் என்று கருதப்பட்டு வருகிறது. பொதுவாக தாம்பத்யம் என்றால் பெண்கள் கீழேயும் ஆண்கள் மேலேயும் என்றும் தான் வரையறுக்கப்பட்டுள்ளது. சினிமா முதல் அனைத்திலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தான் தாம்பத்யம் எப்போதுமே ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவது என்பது போல் நம்பப்படுகிறது. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. மேலை நாடுகளை பொறுத்தவரை அவர்கள் தாம்பத்யத்தை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு முறையில் அனுபவிக்கிறார்கள்.
இதில் மிக முக்கியமான விஷயம் பெண்கள் மேலேயும் ஆண்கள் கீழேயும் இருப்பது. இந்த முறை ஆதிக்கம் செய்யும் முறை என்று உங்களுக்கு தோன்றினால் நிச்சயமாக இதை படிக்கும் நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் பெண் துணையை உங்களை ஆதிக்கம் செய்யவிடுங்கள். பெண்ணாக இருந்தால் உங்கள் ஆணை நீங்கள் ஆதிக்கம் செய்யுங்கள். இதில் தவறேதும் இல்லை என்று தான் செக்ஸ் ஸ்பெசலிஸ்ட்டுகள் முதல் ஏன் காமசூத்ராவே கூறுகிறது.