தினமும் 10 மில்லி தேன்
சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலுக்கு வலு உண்டாகும்.
·
தேனுடன் எலுமிச்சை சாறு
கலந்து குடித்துவந்தால் வாய்ப்புண் நீங்கும். நாக்கு ருசி மொட்டுகள் சீரடையும்.
·
அடிபட்ட இடம், தீப்பட்ட
இடங்களில் முதல் உதவியாக தேனை தடவுவது நல்லது. அதன்பிறகு மருத்துவம் செய்துகொள்ளலாம்.
·
சுடுநீரில் தேன் கலந்து
குடித்தால் ஆஸ்துமா, சளி, மூச்சிரைப்பு குணமாவதுடன் இரவில் நிம்மதியான உறக்கம் கிட்டும்.
மாரடைப்பு வராமல் தடுப்பது
எது தெரியுமா? இஞ்சி
இஞ்சிக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பார்கள். ஆம்,
உடல் ஆரோக்கியம் காக்கும் அற்புத சக்திகள் இஞ்சியில் மறைந்துள்ளன.
·
தலைவலி, உடல் வலி, சோர்வு
இருக்கும்போது இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து சுடுநீரில் கலந்து கொடுத்தால் மொத்தமும்
சரியாகிவிடும்.
·
துயரம், கவலை, மன அழுத்தம்
ஏற்படும்போது இஞ்சியை டீயாக்கி குடிப்பது மிகுந்த பயன் தருகிறது.
·
ரத்தக்குழாயில்
கொழுப்பு சேர்வதை தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு என்பதால் மாரடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.
·
பெண்களின்
மாதவிலக்கு குறைபாட்டை நீக்குவதுடன் கருப்பை குறைபாட்டையும் களைகிறது இஞ்சி.