Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெண்களின் மாதவிடாய், நீர்கட்டிகள் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து!

தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை.

அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்து. நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.

கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

Thirukkural

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிடாய் காலத்தில் செ**ஸ்! அதிகம் விரும்பும் பெண்கள்! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

தடை கற்களை படிக்கற்களாக்கி கலெக்டரான விவசாயி மகள் தர்மலா ஸ்ரீ! நெகிழும் உறவுகள்!

tamiltips

பண்டிகை தினங்களில் கிடைக்கும் விளாம்பழம் மகிமை தெரியுமா ??

tamiltips

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலில் எத்தனை அற்புதம் நடக்கும் தெரியுமா!

tamiltips

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!

tamiltips