Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பொதுவாக பெண்களுக்கு வரும் நோய்களும் அதற்க்கான ஆரோக்கியமான பாட்டி வைத்தியமும் !

1. வெள்ளைபடுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் – மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்

3. சீரற்ற மாதவிலக்கு – அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் – ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

Thirukkural

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி – அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் – வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு – சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை – பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

5. பெண்களின் வயிற்று சதை குறைய: 

சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

பூவரசு பூ – இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள். காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!! 100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.

புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.

20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.

சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.

சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும். மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.

கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.

மாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு. மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.

வல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்களுக்கு காது கேட்பதில் சிரமம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள்!

tamiltips

உங்கள் வீட்டுக்குள் செல்வம் தரும் லட்சுமி தேவி நுழைய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்!

tamiltips

முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

tamiltips

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

tamiltips

தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

tamiltips

வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

tamiltips