நெல்லிக்காயை எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை எடுத்து முடியின் வேர்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். பொடுகை நீக்கவும் முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் நெல்லிக்காய் உதவும்.
வல்லாரை மற்றும் நெல்லி இரண்டும் வைட்டமின் சி அதிகமாக உள்ளடக்கி உள்ளது. இவை உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மூன்று கப் தண்ணீரில் வல்லாரை கீரை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் இரவு முழுவதும் ஊற வையுங்கள். மூன்று கப் தண்ணீர் அறை கப் தண்ணீராக மாறும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் ஆற வைத்து தலையில் தேய்த்து முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்து 40 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் அலசுங்கள்.
மூன்று தேக்கரண்டியளவு செம்பருத்தி பவுடர், 1/4 கப் தயிர், இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் கலந்து கலவையாகக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாகக் கலந்து முடியில் 20 நிமிடங்கள் வைத்து அலசுங்கள். மேலும் இதை வாரத்தில் ஒரு நாள் செய்யுங்கள். இதில் உங்களுக்கு ஏற்ற முறையைச் செய்து உங்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி அடர்த்தியான முடியைப் பெற்று மகிழுங்கள்.
வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. இது உங்கள் தலையில் கொப்புளங்கள் இருந்தால் அதனை எதிர்த்துப் போராடும். இது கொப்புளங்களுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் பொடுகினையும் நீக்குகிறது. ஒரு கை முழுவதுமாக வேப்பிலை இலைகளை எடுத்து ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வையுங்கள்.
அடுத்தநாள் காலையில் அந்த இலைகளை எடுத்து அரைத்து அத்துடன் நான்கு தேக்கரண்டியளவு நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலக்கி உச்சந்தலை மற்றும் முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.