புடலங்காய் எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் பாகற்காய் உதவுகிறது. சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது, சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன
நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது பூசணிக்காய், இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி சுரைக்காய். உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.
இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது பீர்க்கங்காய். தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.