Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பருமனா இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா! சத்துக்கள் எதில் அதிகம் வெள்ளை கருவிலா மஞ்சள் கருவிலா!

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.

இதய நோய், சர்க்கரை நோய் பிரச்சனை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம். கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், ‘டி’ முட்டையில் உள்ளது. அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.

முட்டையில் இயற்கையாகவே வைட்டமின், ‘பி12’ மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன. இந்தச்சத்துகள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை. முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

2 மாதத்திற்கு முன்பு சைஸ் 38..! இப்போது சைஸ் 30..! 40 வயதில் சாதித்து காட்டிய அங்கிதா!

tamiltips

இதைப்படித்தால் தோல்வி என்ற எண்ணம் மறைந்து தன்னம்பிக்கை கூடும்

tamiltips

மரணத்தை நினைத்து கவலைப்பட கூடாது! சித்தர்களின் அருள்வாக்கு இதோ!

tamiltips

நீங்கள் உபயோகபடுத்தும் வாசனை திரவியதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீமைகள் என்று தெரியுமா?

tamiltips

பியூட்டி பார்லர்க்கு செல்லாமலே அழகிற்கு அழகு சேர்க்க சின்ன சின்ன டிப்ஸ்!

tamiltips

நீங்கள் குள்ளமாக இருக்கிறீர்கள் என்று கவலையா? இதோ அதை மாற்ற சரியான சில வழிகள்!

tamiltips