அதனால் தான் எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு சரியும் நிலை உருவாகுமோ அப்போதெல்லாம் தங்கம் விலை தருமாறாக உயரும். அதேபோல் அமெரிக்காவின் பொருளாதாரம், மற்ற உலக நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்தால் மக்கள் உடனே தங்கத்தை நாடுவார்கள். அப்படி எல்லோரும் தங்கத்தில் முதலீட்டை திருப்பியதால் கடந்த ஓராண்டில் தங்கம் விலை 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பொங்கல் சமையத்தில் கணிசமாகக் குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக இருந்தது. ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை இந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்தது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டது. மீண்டும் இன்று சவரனுக்கு ரூ. 264/- அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,049 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,392 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,856 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,848 ஆகவும் இருந்தது. இன்று சவரனுக்கு ரூ. 256/- அதிகரித்து 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ. 3,888 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.31,104 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ரூ. 264/- அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,082 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32,656 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
30.1.2020 – 1 grm – Rs. 4,082/-, 8 grm – 32,656/- ( 24 கேரட்)
30.1.2020 – 1 grm – Rs. 3,888/-, 8 grm – 31,104/- (22 கேரட்)
ரூ. 51,000/- ஐ தாண்டிய வெள்ளி விலை நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.1800/-குறைந்திருந்தது.. இன்று ரூ.500/- அதிகரித்து வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.49.70 ஆகவும் கிலோவுக்கு ரூ.49,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..