Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

கர்ப்பக்காலம் என்பது மிக முக்கியமான காலகட்டம். பெண்களின் வாழ்க்கை பயணத்தில் ஒரு முக்கியமான அங்கம். இந்தக் காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டால் கர்ப்பக்காலத்தை ஆரோக்கியமான முறையில் வழிநடத்தி செல்லலாம்.

எந்த உணவுகளை கர்ப்பக்காலத்தில் தவிர்க்கலாம்?

#1. அதிக மெர்குரி உள்ள மீன்கள்

சுறா, ட்யூனா மீன்கள் அதிக மெர்குரி உள்ள மீன்கள் இவற்றை அதிக அளவில் உட்கொள்ள கூடாது.

மேற்சொன்ன மீன்களை குறைந்த அளவில் எப்போதாவது சாப்பிடலாம். 2 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

அதிக அளவில் உட்கொண்டால் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், வயிற்றில் உள்ள கரு, நோய் எதிர்ப்பு திறன் ஆகியவைப் பாதிக்கலாம்.

அரைவேக்காடு மீன்களை உண்ண கூடாது. சுஷி உணவுகளை சாப்பிட கூடாது.

Thirukkural

குறைந்த மெர்குரி அளவு மீன்களை வாரம் இருமுறை சாப்பிடலாம். மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் ஆகிய பல்வேறு மீன்கள் ஓமேகா 3 சத்துகள் கொண்டவை. இவற்றை சாப்பிடுவது நல்லது.

#2. வேகவைக்காத முட்டை

சிலர் ஹாஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். கர்ப்பக்காலத்தில் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சால்மெனெல்லா எனும் கிருமிகள் வேக வைக்காத முட்டைகளில் இருக்கும். எனவே, இதனால் குமட்டல், வாந்தி, வயிறு பிடிப்பு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் வரலாம்.

மறைமுகமாகவும் வேகவைக்காத முட்டையை சாப்பிட கூடாது. ஆம் சில உணவுகளில் வேக வைக்காத முட்டையை சேர்த்திருப்பர். அவை, லைட்லி ஸ்க்ராபிள்டு முட்டை, போச்சுடு முட்டை, சில வகை சாஸ், மயோனைஸ், சாலட் டிரஸ்ஸ்டிங், ஹோம்மேட் ஐஸ்கிரீம், கேக் ஐசிங் போன்றவற்றில் பச்சை முட்டை கலந்து இருக்கும்.

வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது. பாதுகாப்பானதும்கூட.

raw eggs

இதையும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்… தடுக்க, தவிர்க்க… சுகபிரசவம் சாத்தியமே..! 

#3. கெஃபைன்

காபி, டீ, சாஃப்ட் டிரிங்க்ஸ், கொகோ போன்றவற்றில் கெஃபைன் கலந்திருக்கும்.

வயிற்றில் உள்ள குழந்தையை எவ்வாறு பாதிக்கும் எனப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க:

#4. முளைக்கட்டிய தானியங்கள்

மிகவும் சத்தான உணவு இது. ஆனால், இதில் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

எனவே வேகவைத்து சாப்பிடுவது மிக மிக நல்லது.

இதையும் படிக்க: கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

#5. காய்ச்சாத பால்

காய்ச்சாத பாலில் மில்க் ஷேக், ஸ்மூத்தி, ஐஸ்கிரீம் தயாரிக்கின்றனர். இதை சாப்பிடுவதால் பாக்டீரியாக்களின் பாதிப்பு அதிகரிக்கும்.

காய்ச்சிய பாலை குடிப்பது, காய்ச்சிய பாலில் மில்க் ஷேக் குடிப்பது நல்லது.

#6. ஆல்கஹால்

சிலர் கருவுற்றிருந்தாலும் எப்போதாவது தானே என மது அருந்துகின்றனர். இது தவறு.

கரு கலைப்போ கருவின் மூளை பாதிக்கவோ செய்யலாம்.

papaya

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

#7. சில வகை பழங்கள், காய்கறிகள்

சிலருக்கு மட்டுமே சில வகை பழங்கள், காய்கறிகள் ஒத்துக்கொள்ளாது. அனைவருக்கும் அல்ல.

எனவே, குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் இந்த உணவுகளைத் தவிர்ப்பதா சேர்ப்பதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

பப்பாளி – லேடக்ஸ் அதிகம் இருப்பதால் யூட்டரினில் (uterine) பிரச்னை வரலாம்.

கருப்பு திராட்சை – வயிற்றில் உள்ள கருவின் உடல் சூட்டை அதிகரிக்கலாம்.

பைன் ஆப்பிள் – சிலருக்கு உடல் சூட்டை தரலாம்.

வேகவைக்காத முட்டைக்கோஸ், லெட்யூஸ் இலைகளில் கிருமிகள் இருக்கலாம். வேக வைத்தால் நீங்கிவிடும்.

மரபணு மாற்றம் செய்த எந்த பழங்களோ காய்கறிகளோ கர்ப்பிணிகள் மட்டுமல்ல யாரும் உண்ண கூடாது.

இதையும் படிக்க: முதல் 3 மாதங்கள்… கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?

#8. அலர்ஜி உணவுகள்

சிலருக்கு சில உணவுகள் அலர்ஜி தரும். அவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

சோயா, கோதுமை, பசும்பால், முட்டை, நிலக்கடலை, நண்டு, கத்திரிக்காய், நட்ஸ், மீன், ஷெல் மீன், சில பயறு வகைகள் ஆகியவற்றை உண்ணும் முன்னர் அலர்ஜி தருமா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

#9. சாலட், சாண்ட்விச்

சில ஹோட்டல், ரெஸ்டாரண்ட், ஃபாஸ்ட் ஃபுட் ஆகிய இடங்களில் கழுவாமலே காய்கறிகளையோ பழங்களையோ உணவாகத் தயாரிப்பார்கள். எனவே, சாலட், சாண்ட்விச், பர்கர் இவ்வித உணவுகளைத் தவிர்க்கலாம்.

இதையும் படிக்க: கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?

sandwich

இதையும் படிக்க: குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்…

#10. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்

டசர்ட், கேண்டி, கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், சாக்லெட், ஸ்வீட்டான டிரிங்க்ஸ் இவற்றை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வாந்தி, மலச்சிக்கல், குமட்டல், எடை அதிகரிப்பது, கர்ப்பக்கால சர்க்கரை நோய் வருவது, கருவின் மெட்டபாலிக் சிண்ட்ரோம் பாதிப்பது, குறை பிரசவம், சரியான காலத்துக்கு முன்னரே வலி வருவது போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஆரோக்கியமான இனிப்புகளை சாப்பிடலாம். பேரீச்சை, கருப்பட்டி, வெல்லம், உலர்திராட்சை, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, பழங்களில் உள்ள இனிப்பு ஆகியவற்றை சாப்பிடலாம்.

#11. மீதம் உள்ள உணவுகள்

வீட்டில் உள்ளவர் சாப்பிட்டு மிச்சமிருக்கும் உணவுகளை சூடு செய்தோ ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடவே கூடாது.

உணவைத் தயாரித்து 4 மணி நேரத்துக்கு மேல் இருந்தால், அந்த உணவை சாப்பிட வேண்டாம்.

#12. ரீஃபைன்ட் உணவுகள்

பிரெட், பிரவுன் பிரெட், அனைத்து வகை பிரெட்களும்தான், பாஸ்தா, பிட்டா, குக்கீஸ், பீசா, நூடுல்ஸ், ரெடிமேட் சூப், ரெடிமேட் உணவுகள், ஊறுகாய், ரெடிமேட் சட்னி, சாஸ், பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

#13. இறைச்சி

அதிக சிக்கன், டர்கி, ஹாட் டாக், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்ண கூடாது.

சிக்கனை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. நாட்டுக்கோழியாக இருந்தால் மிகவும் குறைவான அளவில் மாதம் ஒருமுறை சாப்பிடலாம்.

இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள் என்ன என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்

tamiltips

2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

tamiltips

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யும் அறிகுறிகள்…

tamiltips

வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்

tamiltips

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

tamiltips

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்…

tamiltips