ஆரம்பத்தில் உருண்டை வடிவமாகவே இட்லி அவிக்கப்பட்டது. விருந்து, பண்டிகை நேரங்களில் மட்டுமே அவிக்கபட்ட இட்லி, இப்போது பெரும்பாலான தமிழர்களின் காலை மற்றும் இரவு உணவாக மாறிவிட்டது.
·
இட்லியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை நிரம்பியிருப்பதால் எளிதில் ஜீரணமாக உதவி செய்கிறது.
·
பசியை மட்டுப்படுத்தி திருப்தியளிக்கும் லைசின் அமிலம் இட்லியில் இருப்பதால், பசி உடனே அகன்று எளிதில் மனத்திருப்தி கிடைக்கிறது.
·
இட்லியுடன் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி எடுத்துக்கொண்டால் நரம்புகள் சுறுசுறுப்படைந்து ரத்தசுழற்சி மேம்படும்.
·
சிறு குழந்தைகளுக்கு இட்லி கொடுக்கும்போது உடல் வளர்ச்சி ஏற்பட்டு எலும்புகள் வலுவடையும்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாத உணவு இட்லி மட்டும்தான்.