Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம்

கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்…

கர்ப்பமாக இருப்பது நோய் அல்ல… அது ஒரு நிலை… ஒரு பருவம் என்றும் சொல்லலாம். நீங்கள் நோயாளி கிடையாது. மனதில் இதைப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகளுக்கு அன்றாடம் வரக்கூடிய உடல் உபாதைகள் அதன் தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கர்ப்பமா என எப்படி உறுதி செய்வது?

சரியாக மாதந்தோறும் வரும் மாதவிடாய் தள்ளிப்போனால், பாசிட்டிவாக இருங்கள். நல்ல விஷயம் காத்திருக்கிறது.

யூரின் டெஸ்ட் மூலம் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். மெடிக்கல் ஷாப்களில் இதைக் கண்டுபிடிக்க உபகரணங்கள் விற்கின்றன.

ரத்தப் பரிசோதனை மூலம் மிக சரியாக உறுதி செய்துகொள்ளலாம்.

மகப்பேறு மருத்துவரைச் சந்திந்த பின்னும் உறுதி செய்துகொள்ளலாம்.

Thirukkural

வாழ்த்துகள்… உடலுக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள். சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். துரித உணவுப் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். சின்ன சின்ன சிரமங்கள் ஏற்படும் அதைச் சமாளிக்க வழிகள் நிறையவே இருக்கின்றன. பயம் தேவையில்லை.

என்னென்ன உடல் உபாதைகள் வரலாம்?

இடுப்பு மற்றும் முதுகு வலி

டர்க்கி டவலை சூடான தண்ணீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

ஹீல்ஸ் தவிர்த்து ஃப்ளாட் செருப்பு அணியுங்கள்.

சீரான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.

கால்களை நேராக வைத்து நடக்க வேண்டும். கோணலான செருப்புகளைத் தவிர்க்கலாம்.

பூண்டு, மிளகு, இஞ்சி, துளசி, புதினா, மஞ்சள் ஆகியவை உங்கள் உணவில் இடம் பெறட்டும்.

வண்டியில் அதிக நேரம் பயணிக்க வேண்டாம்.

நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கலாம்.

இதையும் படிக்க: கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?

மலச்சிக்கல்

முதம் மும்மாதங்களில் மலச்சிக்கல் தொந்தரவு வரலாம். கவலை வேண்டாம். இயற்கை முறையில் தீர்வு இதோ.

இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

இரும்புச் சத்து மாத்திரைகள், டானிக்கால் கூட மலச்சிக்கல் வரலாம். அதற்கு ஏற்ற உணவுகளும் சாப்பிடுங்கள்.

கீரைகள், பழங்கள், பச்சை நிற காய்கறிகள் நல்லது.

சில மாதங்களில் சரியாகும். 8,9 மாதங்களில் மீண்டும் மலச்சிக்கல் வரலாம். இயற்கை தீர்வையே பின்பற்றுங்கள்.

மூச்சுத் திணறல்

7,8,9 மாதங்களில் வரக்கூடிய பிரச்னை இது.

கனமாக உள்ள கர்ப்பப்பை உங்கள் நுரையீரலை அழுத்துவதால் வரக்கூடிய தொல்லை.

முடிந்தவரை முதுகை சாய்த்தப்படி நாற்காலியில் உட்காருங்கள்.

மூச்சு பயிற்சி செய்வது நல்லது. இது மிகவும் பாதுகாப்பானது. அனைவருமே செய்யலாம்.

நிபுணர்களிடம் மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்.

mood swings during pregnancy

சுளுக்கு பிடிப்பது

விட்டமின் பி, கால்சியம் குறைபாடால் வரலாம்.

குழந்தையின் தலை, பெல்விக் நரம்புகளை அழுத்தும்போது, உங்களது கெண்டைக்கால் சதை இழுத்துப் பிடிக்கும்.

தரையில் கால்கள் பதியுமாறு வீட்டுக்குள்ளே சிறிது நேரம் நடக்கவும். படுக்கும் முன் செய்யலாம்.

கால்விரல்களை உட்பக்கமாக இழுத்துப் பயிற்சி செய்யுங்கள்.

வலிக்கும் இடங்களில் ஒத்தடம் தர சொல்லலாம்.

மிதமாக கால் அழுத்தி விடலாம்.

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு

கர்ப்பக்காலத்தில் வெள்ளைப்படுதல் நார்மல்தான்.

துர்நாற்றம், அரிப்பு இருந்தால் மருத்துவரை சந்திக்கலாம்.

ரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

நாக்கு, சுவையில் மாற்றம்

புளிப்பு, காரம், இனிப்பு போன்ற அனைத்தும் சுவைக்க தோன்றும்.

6 சுவைகளையும் அளவாகச் சாப்பிடுவது நல்லது. ஏன் அளவாக சாப்பிட வேண்டும் என லின்க் பதிவிம் பார்க்க.

இதையும் படிக்க : அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?

சாம்பல், சுண்ணாம்பு, சாக்லேட் சாப்பிட அதிகமாக தோன்றினால் மருத்துவரிடம் செல்லுங்கள். கால்சியம் குறைபாடாக இருக்கலாம்.

ஈறு வீக்கம்

சில பெண்களுக்கு பல் ஈறுகளில் வீங்கி ரத்தம் வரலாம்.

பல் தேய்த்து முடித்த பின் ஈறுகளில் உங்கள் விரலால் மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் போல செய்யுங்கள்.

சாஃப்ட் பிரஷ் பயன்படுத்துங்கள்.

இரவு, பகல் இருமுறை பல் தேய்க்கவும்.

பல் பிடுங்குவது, எக்ஸ்ரே எடுப்பதை அவசியம் தவிர்க்கவும்.

தலை முடி உதிர்தல்

ஹார்மோன் மாற்றத்தால் பிசுபிசுப்பு, வறட்சி இப்படி எதாவது வரலாம்.

வாரம் இருமுறை தலைக்கு குளிக்கலாம்.

குழந்தை பிறந்த பிறகு சரியாகி விடும்.

தரமான, கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்க: பொடுகை முற்றிலுமாகப் போக்கும் சிம்பிள் வீட்டு வைத்தியம்…

நெஞ்சு எரிச்சல், செரிமான தொல்லை

கர்ப்பப்பையில் குழந்தை வளர்வதால், மேல்நோக்கி நகர்வதால் வரும் பிரஷர்.

கர்ப்பக்காலத்தில் செரிமான பிரச்னை வருவது இயல்பு.

எண்ணெய் உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

இரவில் தயிர், கீரைகள் சாப்பிட கூடாது.

இஞ்சி, புதினா உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் இளஞ்சூடான தண்ணீரை அருந்துங்கள்.

stress during pregnancy

மூட் ஸ்விங்ஸ்

கோபம், ஆசை, பயம், அழுகை எல்லாம் கலந்து வரும். ஏன் எனத் தெரியாது.

இதைச் சமாளிக்கும் வழிகள் உள்ளன. லின்கை பார்க்க.

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

உடல் அரிப்பு

ஐந்தில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பக்காலத்தில் அரிப்பு பிரச்னை வரும். இது ஹார்மோன்களால் வரும் மாற்றம்.

அடி வயிறு பெரிதாகும் போது, தோல் இழுபடும்போது அங்கே அரிப்பு வரும்.

தளர்வான ஆடைகள், பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது.

வயிற்றில் 3-ம் மாதத்திலிருந்து விட்டமின் இ எண்ணெய் தடவுங்கள். ஸ்ட்ரெச் மார்க்ஸ் வராது.

மசக்கை

காலை எழுந்ததும் தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி தொல்லை இருக்கலாம்.

எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.

பழங்கள் சாப்பிடுவது நல்லது.

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

மூலம்

சில பெண்களுக்கு மட்டுமே வரலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் சாப்பிடுங்கள். கீரைகள் சாப்பிடலாம்.

கர்ப்பக்காலம் முடிந்ததும் சரியாகிவிடும்.

மலச்சிக்கலுக்கான இயற்கை தீர்வுகளைப் பின்பற்றுங்கள்.

கை, கால் வீக்கம்

உணவில் அதிக உப்பு வேண்டாம்.

கருவாடு, ஊறுகாய் தவிர்க்கலாம்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்.

ஒத்தடம் கொடுக்கலாம்.

தோலில் ஏற்படும் மாற்றங்கள்

முகத்தில் திட்டு திட்டாக வரும்.

மார்பு காம்பில் பிரவுன், கறுப்பாக மாறலாம்.

வயிறு, மார்பகங்கள், பின்னங்கால்கள், தொடை பகுதிகளில் கோடு கோடாக விழும்.

முகத்தில் தோன்றும் நிற மாற்றம் குழந்தை பிறந்த பின் சரியாகும்.

இதையும் படிக்க: கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

தூக்கமின்மை

கடைசி 3 மாதங்கள் தூக்கம் சற்று குறையும்.

தூங்கும் முன் பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக பால் அருந்தவும்.

மிதமான வாக்கிங் செய்யலாம்.

இனிமையான இசை கேட்கலாம். மியூசிக் தெரபி சிடி வாங்கி கேளுங்கள்.

இரவில் 8 மணி நேரம், பகலில் 2 மணி நேரம் எனத் தூங்கலாம்.

இதையும் படிக்க : காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்…

Source : குழந்தை வளர்ப்பு என்னும் அறிய கலை

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?

tamiltips

நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

tamiltips

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

tamiltips

கர்ப்ப கால மசக்கை

tamiltips

பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

tamiltips

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 6 வீட்டு வைத்தியம்…

tamiltips