ஒரு காலத்தில் ஏசி இருந்த வீடுகளை மிகவும் பிரமிப்புடன் பலரும் பார்த்து சென்றிருக்கலாம். ஆனால் காலங்கள் ஓட ஓட அது வசதி மட்டுமின்றி அத்தியாவசியமானது. என்ற நிலை தற்போது வந்துவிட்டது. இதற்கான காரணம் தற்போது கொளுத்தும் வெயில் தான். எத்தனை மின்விசிறிகள் ஓடினாலும் வெப்பத்தின் தாக்கத்தை அவற்றால் தணிக்க முடியாது.
எனவே ஏசி என்பது இங்கு கட்டாயமாகிறது. ஆனால் ஏசியின் அடிப்படை விலை என்பது 25 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. இந்த விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடினமான ஒன்று. இந்தக் கடினத்தை சந்தித்த கோவை அமுத்த செல்லபுரம் என்ற ஊரைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீஷ் என்பவர் தானே ஒரு ஏசியை உருவாக்கியுள்ளார். தனது மகளை வெயிலிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் ஏசி வாங்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அதற்கு விலை தடையாக இருக்கவே அவராகவே சொந்தமாக ஒரு ஏசி உருவாக்கியுள்ளார். இதற்கு அவர் உபயோகித்த பொருட்கள் மின்விசிறி, மண்பானை, கூலாங்கற்கள், வெட்டிவேர், தண்ணீர், மின்மோட்டார் சிறிய பைப் ஆகியவையே ஆகும். பொதுவாக வெட்டிவேர் மற்றும் கூழாங்கற்கள் ஆகியவை குளிர்ச்சியான பொருட்கள். இயற்கை தந்த அற்புத பொருட்களைப் பயன்படுத்தி அவர் இந்த ஏசியை உருவாக்கியுள்ளார். இதற்கான காப்புரிமையை பெறுவதற்கும் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.