Tamil Tips
கர்ப்பம் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமடைய 24 டிப்ஸ்…

சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ்

(C-Section Recovery Tips) 

#1. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள்

குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும்.

அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள்.

சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

#2. ப்ரோபயோட்டிக் உணவுகள்

தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும்.

Thirukkural

நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

#3. மிதமான நடை

டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது.

குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

broccoli for new moms

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை (reduce belly fat for mothers after birth) குறைப்பது எப்படி?

#4. சரியான உணவு

உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம்.

குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

#5. மலச்சிக்கல் தொந்தரவு

கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும்.

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

#6. எடையைத் தூக்க வேண்டாம்

முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம்.

வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

#7. ஈமோஷனல் சப்போர்ட்

சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.

மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

#8. வஜினல் டிஸ்சார்ஜ்

சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும்.

குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும்.

முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

#9. மார்பக வீக்கம்

கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.

#10. ஓய்வு அவசியம்

சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள்.

குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள (Tips for Mother Feeding Moms) வேண்டியவை

c section recovery tips tamil

#11. தாம்பத்திய வாழ்க்கை

6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

#12. பெல்லி பாண்ட்

பிரசவித்த பிறகு தளர்வாக இருக்கும் வயிறு, இயல்பு நிலைக்கு வர சில மாதங்கள் ஆகும். எனவே தரமான பெல்லி பேண்டை மருத்துவர் அனுமதியோடு அணியுங்கள்.

#13. போதுமான தண்ணீர்

மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

#14. உணர்வுகளை சமாளியுங்கள்

ரோலர் கோஸ்டர் போல உணர்வுகள் மேலேயும் கீழேயும் மாறி மாறி போகும்.

மகிழ்ச்சி, அழுகை என மாறி கொண்டே இருக்கும். இது இயல்புதான். பயம் வேண்டாம்.

#15. ஸ்விம்மிங், டப் குளியல்

முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற

தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

citrus fruits for new moms

இதையும் படிக்க: தாய்ப்பால் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், அதற்கான பதில்கள்… 

#16. சிசேரியன் செய்த இடம் குணமாக

புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும்.

விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

#17. உணவு முறை

பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

இளநீர் குடிப்பது நல்லது.

செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

#18. காயம் குணமாக

தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள்.

ஸ்கரப் செய்ய கூடாது.

மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள்.

தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

hair loss for new moms

இதையும் படிக்க: ஸ்ட்ரெச் மார்கை (Stretch Marks) நீக்கும் 11 வீட்டு மருத்துவ வழிகள்

#19. முடி மற்றும் சருமத்தில் மாற்றம்

முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான்.

ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

#20. வயிற்றை ஹோல்ட் செய்யுங்கள்

நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

#21. டீப் பிரீத்திங்

2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள்.

இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

#22. தோள்ப்பட்டையை அசைத்தல்

உட்கார்ந்து கொண்டே இரண்டு பக்க தோள்ப்பட்டையும் வட்ட வடிவில் 10 முறை சுற்றுங்கள். காலை, மதியம், மாலை, இரவு என செய்தால் தோள்ப்பட்டை இறுக்கம் இருக்காது.

#23. மிதமான ஸ்ட்ரெச்சிங்

சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு மெதுவாக உங்கள் கைகளைத் தூக்குங்கள். மெதுவாக கைகளை இறக்குங்கள். இப்படி 10 முறை காலையும் மாலையும் செய்யலாம்.

#24. மிதமான பயிற்சிகள்

மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.

இதையும் படிக்க: உடல் எடையை குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்… 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு வரும் விக்கலை எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள்…

tamiltips

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… எந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்?

tamiltips

0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

tamiltips

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்…இரத்த சோகையை 100% குணமாக்கும் உணவுகள்…

tamiltips

குழந்தையை குளிக்க வைக்கும் முறை சரியா என எப்படி தெரிந்துகொள்வது?

tamiltips

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

tamiltips