பார்லியில் இருக்கும், ‘பீட்டா குளூக்கான்’ என்ற நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுப்படுகிறது. இதுதவிர பார்லியில் செலினியம், டிரிப்டோபான், தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவையும் நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்துவிடுகிறது.
‘வைட்டமின் பி’ எனப்படும் நியாசின் பார்லியில் அதிகம் இருப்பதால் இதய வியாதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். மேலும் மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும். பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது.
நோய் வந்தால் மட்டுமே பார்லி சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆரோக்கியமான நபர்களும் இதனை எடுத்துக்கொள்வது நல்லது. கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம்.