விடியற்காலை 3 முதல் 5 மணி வரை : நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை : பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை : வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை : மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை : இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல்,கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை : சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை : சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை : சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை : பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை : உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை : பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை : கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்
இதனை மட்டும் கடைபிடித்துப் பாருங்கள்… ஆரோக்கியம் உங்கள் கையில்தான்.