* சாப்பிட்டதும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது பலரது பழக்கம். இது வயிற்று உப்புசம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பின்னரே சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டதும் தேநீர் அருந்துவதும் சரியல்ல. தேநீரில் உள்ள அமிலங்கள் உணவில் இருக்கும் புரதச்சத்துக்களை கடினமாக்கி, செரிமானத்தைச் சிக்கலாக்கிவிடும்.
* சாப்பிட்டதும் குளியல் போடுவதும் வேண்டாம். குளிக்கும் நேரத்தில் ரத்த ஓட்டம் உடலின் மற்ற பகுதிகளில் அதிகரிப்பதால் செரிமான உறுப்புகள் வேலை செய்ய சிரமப்படும்.
* சாப்பிட்டதும் நடப்பதன் காரணமாகவும் செரிமானக் குறைபாடு ஏற்படும். அதனால் சில நிமிடங்களாவது ஓய்வு எடுத்த பிறகே நடக்க வேண்டும்.
உணவு உண்டதும் அப்படியே படுப்பதும் உடல் நலனுக்கு உகந்தது அல்ல. முக்கால் வயிறு மட்டுமே சாப்பிட்டு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், ஜீரணம் தொடர்பான சிக்கல் எப்போதுமே எட்டிப் பார்க்காது.