பிரபல ரிவி ‘பிக்பாஸ் 4’ போட்டியாளர்கள் குறித்த முதல் அறிவிப்பினை காணொளி மூலமாக வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது.
பிரபல ரிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின.
ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர்.
இந்நிலையில் இம்முறை கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை யூகிக்குமாறு பிரபல ரிவியே அறிவித்துள்ளது. நேயர்களின் யூகம் சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என்றும் பிரபல ரிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி நடிகர்களின் பெயர்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகிறார்கள்.
‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
— Vijay Television (@vijaytelevision) September 5, 2020