மனித உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட 2 மணி நேரங்கள் அதீத சக்தியுடன் செயலாற்றுகிறது. அந்த வகையில் மனித உடலில் உள்ள உறுப்புகள் எந்தெந்த நேரத்தில் அதிகமாக இயங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
நுரையீரல் : 3 Am – 5 Am – அதனால்தான் அதிகாலை எழுந்து ஓசோன் நிறைந்த சுத்தமான காற்றை உள்வாங்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
பெருங்குடல் : 5 Am – 7 Am – காலையில் எழுந்தவுடன் பெருங்குடலில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றிவிட வேண்டும். அப்போதுதான் பெருங்குடல் ஆற்றலுடன் இயங்கமுடியும்.
இரைப்பை : 7 Am – 9 Am – இதுதான் காலை உணவு எடுத்துக்கொள்வதற்கு ஏற்ற நேரம்.
மண்ணீரல் : 9 Am – 11 Am – உணவில் இருக்கும் சக்திகளை கிரகித்துக்கொள்ளும் நேரம் இது. இப்போது அதிக உடல் உழைப்பு இருக்கக்கூடாது.
இருதயம் : 11 Am – 1 Pm – வயிறு காலியாக இருக்கவேண்டிய நேரம் இது. இப்போது கண்டதையும் தின்று இதயத்தின் பணியை சிக்கலாக்கக்கூடாது.
சிறுகுடல் : 1 Pm – 3 Pm – மதிய உணவு எடுத்துக்கொள்ளும் நேரம். வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது.
சிறுநீர்பை : 3 Pm – 5 Pm – தண்ணீர் குடிக்கவேண்டிய நேரம். சாப்பிடும் நேரத்தில் தண்ணீர் குடிக்ககூடாது.
சிறுநீரகம் : 5 Pm – 7 Pm – ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது.
இருதய மேலுறை : 7 Pm – 9 Pm – இரவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்.
மூவெப்ப மண்டலம் : 9 Pm – 11 Pm – இரவு படுக்க வேண்டிய நேரம்
பித்தப்பை : 11 Pm – 1 Am – கண்டிப்பாக உடலில் உள்ள அனைத்து அவயங்களும் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம். அதனால் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் இருக்கக்கூடாது.
கல்லீரல் : 1 Am – 3 Am – ஆழ்ந்து உறங்கவேண்டிய நேரம் இது. எந்தக் காரணம் கொண்டும் விழிக்கவே கூடாது.
இத்தனை அவயங்களும் அவை வேலை செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக இயங்க வேண்டும் என்றால் இரவில் விழித்திருக்கக் கூடாது.