Tamil Tips
கிசுகிசு செய்திகள் ட்ரெண்டிங் செய்திகள் முக்கிய செய்திகள்

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், வாடகை தாய் பற்றியும் கூகுளில் தேடி வருகின்றனர். வாடகை தாய் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

வாடகை தாய் என்றால் என்ன? வாடகைத் தாய்மை என்பது அடிப்படையில் ஒரு வகை கர்ப்பம் ஆகும். ஏதோவொரு காரணத்திற்காக கர்ப்பம் ஆக முடியாத, வயிற்றில் குழந்தையை சுமக்க இயலாத அல்லது சுமக்க விரும்பாத ஒரு பெண்ணிற்காக மற்றொரு பெண் அதை செய்வதே வாடகைத் தாய்மை ஆகும்.

வாடகைத் தாய்மையின் கீழ், ஒரு பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் விந்தணு செலுத்தப்படும். பின்னர் அந்த கரு, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்பட்டு, குழந்தையை சுமந்து, இறுதியில் பெற்றெடுக்க வைப்பார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் இந்த முறையையே நாடுகிறார்கள்.

இந்த செயல்முறையானது பெற்றோர்களாக மாற முடியாத பலருக்கும் வரப்பிரசாதமாய் இருந்து வருகிறது. தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் முறை மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய வகையின் கீழ், வாடகைத் தாய் தந்தையின் விந்தணுவுடன் செயற்கை முறையில் கருவூட்டப்படுகிறார். இந்த பாரம்பரிய வாடகைத்தாய் முறையில், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுகிறார், ஏனெனில் கரு உண்டானது குறிப்பிட்ட வாடகைத்தாயின் கருமுட்டையில் தான்; மேலும் சில சமயங்களில், வாடகைத்தாயின் கருமுட்டையை கருவுறச் செய்ய பிற விந்தணு நன்கொடையாளர்களையும் பெற்றோர்கள் தேர்வு செய்கிறார்கள்.

Thirukkural

கர்ப்பகால வாடகைத் தாய் என்கிற வகையின் கீழ், கருமுட்டை தாயிடம் இருந்தும், விந்தணுவுடன் தந்தையிடம் இருந்தும் சேகரிக்கப்படும். அதாவது இரண்டுமே சட்டப்பூர்வ பெற்றோரிடமிருந்து பெறப்படும், இதன் கீழ் வாடகைத் தாய்க்கும், குழந்தைக்கும் உயிரியல் தொடர்பு இருக்காது.

வாடகைத்தாய்மை என்பது, அரசாங்கத்தால் கூறப்பட்ட ஒரு சட்ட செயல்முறையைப் பின்பற்றுவதை உள்ளடக்கியது. ஏனெனில் குழந்தையின் சட்டப்பூர்வ உரிமைகள் தொடர்பான எதிர்கால சிக்கல்கள் எதுவும் இருக்க கூடாது என்பதற்காக!

மேலும் பெற்றோர் மற்றும் வாடகைத் தாய்மார்கள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக மற்ற கர்ப்பங்களைப் போலவே, வாடகைத் தாய் முறையிலும் சில மருத்துவ அபாயங்கள் உள்ளன.

சமீப காலங்களாக, இம்முறையின் கீழ் குழந்தை பெற்றுக் கொள்வது உலகளவில் வளர்ந்து வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?

tamiltips

அப்பாவின் ச டலத்தின் முன் சத்தம் போட்டு கத்தி அலறிய அனிதா! ச டலத்தின் முன் என்ன சொன்னார் தெரியுமா?

tamiltips

நடிகர் சஞ்சீவ் மனைவி யார் தெரியுமா?அட இவர் இந்த சீரியல் நடிகை தான்.. யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

இருட்டில் மொத்தமாக காட்டி கௌரி கிஷன் வெளியிட்ட புகைப்படம் !! கிறுகிறுத்து போன நெட்டிசன்கள் !! சும்மா கின்னுன்னு இருக்கு !!

tamiltips

பிள்ளையாரை அசால்டாக தூக்கினார் யார் தெரியுமா…!வியப்பில் ரசிகர்கள்…!

tamiltips

அடடே! பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்..!!

tamiltips