Tamil Tips
கருவுறுதல் கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் குழந்தையின்மை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன் பெற்றோர்

இயற்கை வயாகரா முருங்கை கீரை (murungai keerai) பயன்கள்! கீரை சூப் செய்யலாமா?!

முருங்கை கீரை (murungai keerai) பொதுவாகவே எளிதில் கிடைக்கக் கூடியது. இதன் பயன்கள் ஏராளம். மேலும் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டன. இங்கே முருங்கை கீரை, பூ ஆகியவற்றின் நன்மைகள் என்ன? முருங்கை கீரை சூப் போன்ற ரெசிபிகள் தயார் செய்வது எப்படியென்று விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளலாம்.

முருங்கை கீரை நன்மைகள்

முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம். இவ்வளவு சத்துக்களையும் அவ்வளவு எளிதில் மாத்திரைகளால் சந்துவிட முடியாது. அதிலும் பைசா செலவில்லாமல் இயற்கையில் கிடைக்கும் சத்துக்களை வீணாக்குவதேன்? கீழே முருங்கை கீரையின் நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.

உடல் சூட்டைத் தணிக்கும்

முருங்கை கீரை குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சூடு தணியும். இதனால் உடலில் வியர்குருகள் வராமல் தடுக்கப்படும். முருங்கை இலையில் சாறு எடுத்தும் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

வலி குறையும்

முருங்கை கீரையை சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.

புண்கள் ஆறும்

முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.

Thirukkural

கண் பார்வை பலம்

முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.

சருமம் வளம் அடையும்

சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் முருங்கை கீரையை உட்கொள்வதால் குணமடையும். சருமத்தில் ஏற்பட்டுள்ள கொப்புளங்கள் ,பருக்கள் அனைத்தும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் சரியாகும்.

சிறுநீரகம் வலுவடையும்

முருங்கை கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக வெளியேறும். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை வலுவடையச் செய்யும்.

மனவளம் அடையும்

முருங்கை கீரையில் உள்ள விட்டமின் சி மன நலத்திற்கு உகந்தது. இந்தக் கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே காணப்படுகின்றது. கூடுதலாக நினைவுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்குச் சத்தான இந்தக் கீரையைத் தரலாம்.

இரத்தம் விருத்தியடையும்

இந்தக் கீரை ரத்தசோகையைக் குணப்படுத்துவதற்குப் பெயர் போனது. வாரம் 2 முறை இந்த கீரையை எடுத்துக் கொள்வதால் இரத்தம் சிறப்பான வகையில் விருத்தியடையும். இதற்குக் காரணம் இந்த கீரையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து தான். அதனால் இந்தக் கீரையை உணவில் எடுப்பவருக்கு ரத்தசோகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இந்த கீரை உதவும்.

இயற்கை வயாகரா

முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும்.

குழந்தை பேற்றைச் சாத்தியப்படுத்தும்

பெண்களின் கர்ப்பப்பை வலுவடைய இந்தக் கீரை உதவுகிறது. இதனால் பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதுபோல ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆக இருபாலருக்குமே குழந்தை பாக்கியம் ஏற்பட இந்த கீரை உதவுகிறது.

கூந்தல் செழிப்பாக வளரும்

இந்தக் கீரை கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்தக் கீரையைப் பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தல் கருமையாகச் செழித்து வளரும். இதிலுள்ள சத்துக்கள் முடி உதிர்வை பெருமளவில் கட்டுப்படுத்தும்.

இளமைத் தோற்றம் நீடிக்கும்

இந்தக் கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வயதான தோற்றம் சீக்கிரம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சுவாசக் கோளாறு, சளித்தொல்லை நீங்கும்

இந்தக் கீரை சுவாசம் சம்பந்தமான அத்தனைப் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது. சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற அனைத்து வியாதிகளையும் இந்தக் கீரை குணப்படுத்தத் துணை புரிகிறது.

மலச்சிக்கல் தீரும்

இந்தக் கீரையில் சிறப்பான அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் இந்தக் கீரை மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் சுரக்கும்

குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உகந்தது. இருப்பினும் சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாகக் காணப்படும். அவ்வாறான பெண்கள் தங்கள் உணவில் இந்தக் கீரையை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வழியில் அதிகரிக்கும்.

உடல் எடை குறையும்

இதை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உடல் எடை மேண்மை அடையும். தேவையில்லா கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். தசைகள் வலுப்பெற்று பொலிவான தோற்றம் பெறுவீர்கள். அதிக எடையுடையவர்கள் இதை தினசரி உணவில் சேர்க்கலாம்.

இதய செயல்பாடு சிறக்கும்

இந்தக் கீரை இதயத்தை வலுப்படுத்த உதவும். இதனால் இதயம் சிறப்பான வகையில் செயல்படும். எனவே இருதய சம்பந்தமான எந்த வியாதியும் நெருங்கவே கூடாது எனில், வாரம் இருமுறையாவது இந்தக் கீரையை உணவில் சேருங்கள்.

வாயுத் தொல்லை நீங்கும்

இந்தக் கீரை குடல் வாயு தொல்லையைச் சரிப்படுத்தும். வாயுக் கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையைச் சாப்பிடலாம். இந்த கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

இந்தக் கீரையில் விட்டமின் சி போதிய அளவில் உள்ளது. இந்த சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பற்கள் வலுவடையும்

முருங்கை இலைகளில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை பற்கள் வலுப் பெற உதவும். அதனால் பற்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கை கீரையை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

கல்லீரல் சம்பந்தப்பட்டப் பிரச்சினை இருப்பவர்கள் முருங்கை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் உடலால் இந்தக் கீரையை ஜீரணிக்க இயலாது. அதனால் அவர்களுக்குப் பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முருங்கை காய் மற்றும் முருங்கை பூ

முருங்கை கீரை மட்டுமின்றி முருங்கை காய் மற்றும் முருங்கை பூ என்று அனைத்துமே சத்து நிறைந்தவை தான்.

முருங்கை காய்

முருங்கை காய் மிகவும் ருசியானது. நாம் சாம்பாரில் பெரும்பாலும் முருங்கை காயைப் பயன்படுத்துவோம். முருங்கை காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. தொண்டையில் புண் இருந்தால் குணமடையும்.

முருங்கை கீரை, பூ அல்லது பொடியை வைத்து என்னென்ன எளிமையான ரெசிபிகள் செய்யலாம் என்று பார்க்கலாமா?

  • முருங்கை கீரை சூப்
  • முருங்கை கீரை பொரியல்
  • முருங்கை கீரை துவையல்

என்று பல சத்தான பல ரெசிபிக்களை செய்து அசத்தலாம்.

முருங்கை கீரை சூப் செய்யலாமா?

தேவையான பொருட்கள்

  • முருங்கை இலை – 2 கப்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • சீரகம் -1 ஸ்பூன்
  • பூண்டு -7
  • வெங்காயம் -3
  • தக்காளி -1
  • மிளகு தூள் -2 ஸ்பூன்
  • இஞ்சி -சிறிதளவு
  • உப்பு -தேவையான அளவு

முருங்கை கீரை சூப் செய்வது எப்படி?

  • வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • இஞ்சியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
  • பூண்டைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்யை ஊற்றி, சூடான பின், சீரகம், பூண்டு மற்றும் இஞ்சி முதலிய பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பச்சை வாசம் அடங்கியவுடன் முருங்கை இலைகளைச் சேர்த்து வதக்கவும்.
  • இலை சற்று சுருங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • பிறகு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • தற்போது முருங்கை கீரை சூப் தயார் ஆகிவிட்டது.
  • இந்த சத்தான முருங்கை கீரை சூப்பை வாரம் இரண்டு முறை செய்து சாப்பிடுவது நல்லது.

முருங்கை கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

  • முருங்கைக் கீரை -ஒரு கட்டு
  • சீரகம் -1 ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் -5(பொடியாக அரிந்து கொள்ளவும்)
  • கடுகு -1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்
  • வர மிளகாய் -3
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • தேங்காய் -1/4கப்( துருவியது)

முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி?

  • இந்தக் கீரையின் காம்புகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின் இதனைத் தண்ணீரில் அலசி கழுவிக்கொள்ளவும்.
  • குக்கரில் இந்தக் கீரையைப் போட்டுக் கொள்ளவும். அத்தோடு சீரகம் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
  • குக்கரை மூடி ஒரு விசில் வர விடவும்.
  • பிறகு கடாயில் எண்ணெய்யை ஊற்றவும், எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
  • கடுகு பொரிந்தவுடன் வெட்டி வைத்த வெங்காயங்களைச் சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமான பின் குக்கரிலிருந்த முருங்கை கீரையைச் சேர்க்கவும்.
  • மிதமான சூட்டில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும். கீரை நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • இத்தோடு தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறவும்.
  • சுவையான முருங்கை கீரை பொரியல் தயார் ஆகிவிட்டது.

முருங்கை கீரை துவையல்

தேவையான பொருட்கள்

  • முருங்கை கீரை -2 கப்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • கடலைப்பருப்பு -1 ஸ்பூன்
  • துவரம் பருப்பு -1 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
  • வர மிளகாய் -3
  • பூண்டு -5 பல்
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • கொத்தமல்லித் தழை -சிறிதளவு
  • தேங்காய் -1/4 கப் துருவியது

முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி? பார்க்கலாம்:

  • கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் துவரம்பருப்பு முதலிய பொருட்களைச் சேர்த்து வறுக்கவும்.
  • பின் இத்தோடு வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
  • இவற்றைத் தனியாக எடுத்து வைத்து விடவும்.
  • தற்போது கடாயில் எண்ணெய்யை ஊற்றி முருங்கை கீரையைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • பின் வறுத்து வைத்த பொருட்கள் மற்றும் வதக்கிய முருங்கை கீரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • தற்போது சுவையான முருங்கை கீரை துவையல் தயார் ஆகிவிட்டது.

முருங்கை கீரை, பூ ஆகியவற்றின் நன்மைகளைப் பார்த்தோம். கூடுதலாக முருங்கை கீரை சூப் போன்ற ரெசிபிகளையும் அறிந்து பயனடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதையும் படிங்க: சத்தான சுவாயான ரெசிபிகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

tamiltips

குழந்தை இல்லை என்ற கவலையா? இந்த மருந்து ஒன்று போதும் நீங்களும் பெற்றோர் ஆகலாம்

tamiltips

0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்

tamiltips

11 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

tamiltips

3 மற்றும் 4 மாத குழந்தைகளின் வளர்ச்சி… என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

tamiltips

சமைக்க வேண்டாம்… 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி…

tamiltips