Tamil Tips
குழந்தை பெற்றோர்

குளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி?

குளிர்காலம் தொடங்கிவிட்டது. வானிலை மாற்றங்கள் இயல்பானதே. அதைப் பெரியவர்களால் சுலபமாக எதிர்கொள்ள முடியும். ஆனால், குழந்தைகளால் முடியுமா? இதற்காகவே, பனிக்காலத்தில் குழந்தைகளை சற்று மிக கவனமாகவும் சரியாகவும் பராமரிக்க வேண்டும். குளிர் காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பை மேற்கொள்வது நல்லது.

இந்தக் குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்துக்கு வரக்கூடிய பிரச்னைகள். அதற்கான தீர்வுகள்…இவற்றை இங்கு பார்க்கலாம். மேலும், குளிர்கால சரும பராமரிப்பு போன்ற அனைத்தையும் இங்கு பார்க்கலாம்.

குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் சருமத்தை உலர செய்யும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர் காலத்தில் இருந்து காக்க முடியும்.

குளியல் குறைவான நேரம்

குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். 5 நிமிடத்துக்குள் குளித்து விட்டுவரும்படி ஏற்பாடு செய்யுங்கள்.

பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். ஆனால், கால், இடுப்பு, டயாப்பர் உள்ள பகுதிகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

Thirukkural

சுடுநீர் இல்லாமல் இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.

தரமான சோப் 

அதிக வாசனை, அதிக நுரை, அதிக கெமிக்கல்கள் இல்லாத சோப்பை பயன்படுத்துங்கள்.

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் சோப், தற்போது குழந்தைகளுக்கு ஏற்ற சோப்பாக இருக்கிறது. மோசமான கெமிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் குழந்தையின் சருமத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

குளிக்கும்போது, குழந்தைகளின் சருமத்தை ஸ்கரப் செய்ய வேண்டாம். துடைக்கும்போது, மிருதுவான துண்டால் ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.

ஈரப்பதம் முக்கியம்

இந்தக் காலத்தில் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். ஆகையால், சருமத்துக்குத் தரமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி கிரீம் பயன்படுத்தலாம்.

6+ மாத குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், சூப், பழங்கள் போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் சரியான அளவில் தர வேண்டும்.

0-6 மாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அதிகமாகக் கொடுத்து உடலின் நீர்ச்சத்து அளவை பராமரித்துக்கொள்ள வேண்டும்.

மீன், நட்ஸ் மற்றும் நட்ஸ் பவுடர், அவகேடோ போன்றவை சருமத்தை காக்கும் உணவுகள்.

தரமான லாண்டிரி டிடர்ஜென்ட் 

அதிக வாசம், அதிக கெமிக்கல்கள் இருந்தால் குழந்தையின் சருமத்தை உலர்தன்மையாக மாற்றும். இதனால் எரிச்சலும் உண்டாகலாம்.

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் போன்ற தரமான லாண்டிரி டிடர்ஜென்ட் பயன்படுத்தி, குழந்தைகளின் துணியை துவைத்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து குழந்தைகளைக் காக்கலாம்.

winter skin care tips

உலர்ந்த உதடுகள் 

உதடுகள் வறண்டு காணப்படும். வெடிப்பு வெடிப்பாகவும் தெரியும்.

வாய் ஓரமாக வெள்ளையாக மாறவும் செய்யும். இதெல்லாம் பனிக்கால சரும பிரச்னைகள்.

சுத்தமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை தடவி இந்த பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம்.

ஆடைகள் கவனம் 

குளிரைத் தாங்க கூடிய கனமான உடைகளை அணிந்து விடுங்கள். ஆனால், குத்தாத, அரிக்காத உடைகளாக இருப்பது நல்லது.

முழுக்கை, முழுக்கால் மூடும்படியான ஆடைகளை அணியலாம்.

காது, தலைக்கு மப்ளர் அணிந்து விடலாம்.

டயாப்பர் மாற்றும் நேரம் 

வெப்பநிலையும் குளிர்தன்மையுடன் இருக்க, அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

அவ்வப்போது டயாப்பர் மாற்றிவிடுங்கள். நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டாம்.

முடிந்த அளவுக்கு குழந்தையின் தொடை, கால், அடி இடுப்பு பகுதிகளை ஈரத்தன்மை அதிகம் இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

டயாப்பரை மாற்றி, அந்த இடத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்த பின்னர் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி கிரீம் பயன்படுத்துங்கள்.

சிவப்பான கன்னம் 

பனிக்காலத்தில் குழந்தையின் கன்னங்கள் சிவப்பாக கூடும்.

உலர்த்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த பிரச்னை. கன்னங்களில் தடவ, தரமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி லோஷன் பயன்படுத்துங்கள்.

கன்னங்கள் உலர்ந்து சிவப்பாகும் பிரச்னை தடுக்கப்படும்.

சருமம் முழுவதற்கும் கவசம்

விட்டமின் இ கலந்த எண்ணெயை சருமம் முழுவதும் தடவி, 20 நிமிடங்கள் ஊறவிட்டு இளஞ்சூடான நீரில் குளிக்க வைக்கலாம்.

வாரம் 1-2 முறை பயன்படுத்தினாலே போதும்.

தரமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் விட்டமின் இ கலந்த பேபி ஆயில் பயன்படுத்துங்கள்.

கிராடிள் கேப் 

சில குழந்தைகளுக்கு தலையில் செதில் செதிலாக சருமம் உலர்ந்து காணப்படும்.

இதை லேசாக ஆலிவ் எண்ணெய் விட்டு தேய்த்தால் நீங்கிவிடும். இது ஒரு பிரச்னையல்ல. இயல்பான ஒன்றுதான். நாளடைவில் சரியாகிவிடும்.

ஆலிவ் எண்ணெயோ தேங்காய் எண்ணெயோ வைத்துத் தேய்த்து விட்ட பின்னர், ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி ஷாம்பு போட்டு குளிக்க வைத்து விடுங்கள்.

winter skin care tips

டயாப்பர் அரிப்பு 

டயாப்பர் அணியும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்த அரிப்பு பிரச்னை வரும்.

அதுவும் இந்தப் பனிக்காலத்தில் தொடர்ந்து டயாப்பர் அணிந்தால் இப்பிரச்னைகள் வரக்கூடும்.

நன்றாக குழந்தையை சுத்தம் செய்த பின், சிறிது நேரம் சருமத்தை சுவாசிக்க அப்படியே விடுங்கள். பின்னர் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன்  பேபி கிரீம் தடவலாம்.

தேங்காய் எண்ணெய்கூட குழந்தையின் அரிப்பு பகுதிகளில் தடவலாம்.

குடிநீர் 

எப்போதுமே இளஞ்சூடாகவே குழந்தைகளுக்கு நீர் அருந்த கொடுக்கலாம்.

பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்துப் பழகுங்கள்.

போதுமான அளவு நீர்ச்சத்து குழந்தைகளுக்கு முக்கியம்.

பேபி வாஷ்

பனிக்காலத்தில் வாரம் 3 நாள் சோப் போட்டு குளிக்க வைக்கலாம். 3 நாள் பேபி வாஷ் போட்டு குளிக்க வைக்கலாம்.

ஏனெனில் சருமம் அதிக உலரவிடாமல் தடுக்க இப்படி மாற்றி மாற்றிக் குளிப்பாட்டலாம்.

சோப் மற்றும் பேபி வாஷ் ஆகியவற்றை வாங்கும் போது, தரமானதாக இருக்கும் படி பார்த்து வாங்குங்கள். ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி வாஷ் மற்றும் பேபி சோப் உங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதுகாப்பைத் தரும்.

சருமத்தைக் காக்கும் உணவுகள் 

அவகேடோ, மீன், வால்நட், பாதாம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், பப்பாளி, சிட்ரஸ் பழங்களை ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

இதனால், இந்தப் பனிக்காலத்தில் இயற்கையாகவே குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கைக் குழந்தையோடு பயணமா?இதோ 15 சூப்பர் டிப்ஸ் !!

tamiltips

குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் உள்ள 7 ஆபத்தான கெமிக்கல்கள்… கண்டறிவது எப்படி?

tamiltips

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

tamiltips

ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்…

tamiltips

ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

tamiltips

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ‘லஞ்சு பாக்ஸ்’ ரெசிபிகள்! (2 to 5 வயது)

tamiltips