Tamil Tips
குழந்தை பெற்றோர்

15 அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை செக் செய்யுங்கள்…

குழந்தைகளின் இறப்பை எவராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றை மறக்கவும் முடியாது. நவீன அறிவியல், நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் குழந்தைகள் இறக்கத்தான் செய்கின்றன. எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.

இறந்து கொண்டிருக்கும் 3 குழந்தைகளில் ஒரு குழந்தையின் இறப்புக்குக் காரணம் ‘ஊட்டச்சத்துக் குறைபாடு’ என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

குழந்தைகள் இறக்கவோ பலவீனமாக இருக்கவோ பல்வேறு காரணங்கள் உள்ளன.

  • வறுமை
  • ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வது
  • தாய்ப்பால் போதிய அளவு குழந்தைக்கு கிடைக்காமல் போவது
  • தவறான உணவுப் பழக்கம்
  • கழிச்சல் பிரச்னை
  • நிமோனியா
  • அம்மை
  • மலேரியா போன்ற நோய் தாக்குதலால் குழந்தைகள் இறக்கின்றன.

இயற்கையை, உடலைப் புரிந்துகொள்ளுங்கள்

நமக்கு பசி ஏற்படும்போது சாப்பிடுகிறோம்.

வயது அதிகரிக்கையில் நமக்கு எந்தெந்த சத்துகள் தேவையோ அந்த சத்துக்களின் மேல் நமது ஆர்வம் திரும்புகிறது.

Thirukkural

ஆகையால், நாமே இயற்கையாக, தேவையான, சத்தான உணவுகளைத் தேர்வு செய்கிறோம்.

ஆனால் குழந்தைகளால் இவ்வாறு தேடி பெற முடியாது. நாம் தான் சத்தான உணவு வகைகளைக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எந்த குழந்தை பலவீனமாக உள்ளதோ அந்தக் குழந்தைகள் நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுவர். இதனால், இறக்கவும் செய்வர்.

இதையும் படிக்க : 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் இறக்கும் நிலை

பெரும்பாலான குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைக்காமல் போவதால் ஆரோக்கியம் குறைகிறது.

வறுமை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத பெற்றோரின் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் வளர்ந்து கஷ்டப்படுகின்றனர்.

ஊட்டச்சத்தின்றி உண்ணும் உணவுகளால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைத்துவிடாது.

பசிக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு உணவுக் கொடுக்காவிட்டால், குழந்தைகள் பலவீனமாகின்றனர்.

தேவையான விட்டமின், தாது உப்புகள், புரதங்கள், கொழுப்பு சத்து ஆகியவை சரியான அளவில் கிடைக்காத குழந்தைகள் நோஞ்சானாக மாறுகின்றனர்.

வாழும் இடத்துக்கு ஏற்ப, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உணவுகளைத் தாயும் குழந்தையும் உட்கொள்ள வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

இதையும் படிக்க : கர்ப்பம் முதல் பிறப்பு வரை… பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பது எப்படி?

எப்படி குழந்தைகளுக்கு குறைபாடு வருகிறது?

ஏதாவது ஒரு வகையான உணவை மட்டும் உண்ணாமல் தவிர்க்கும் குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

புரதம் சாப்பிடாத குழந்தைகளுக்கு புரதக் குறைபாடு வரும்.

அசைவம் உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு விட்டமின் பி குறைபாடு வரும்.

கீரை மற்றும் பழங்கள் சாப்பிடாத குழந்தைகளுக்கு, ரத்தசோகை நோய் வரும்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

மீன் மற்றும் கொழுப்பு உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி குறைபாடு வரும்.

விட்டமின் ஏ குறைந்தால் கண் பார்வை இழப்பு நேரலாம். கடுமையான கழிச்சல் உண்டாகும்.

தைராய்டு குறைபாடு உள்ள குழந்தைகள், உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியின்றி வளரும். இந்த குழந்தைகளுக்கு மலட்டுத்தன்மைகூட ஏற்படலாம்.

சோடியம், பொட்டாசியம், மெக்னிசியம், செலினியம், துத்தநாகம் போன்ற சத்துகளின் குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குழந்தைகள் பலவீனமாக மாறுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கின்றனர்.

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

unhealthy babies signs

Image Source : Zenparent

எதனால் குழந்தைகளுக்கு அதிகமாக ரத்தசோகை நோய் வருகிறது?

கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட வெல்லம், கருப்பட்டி போன்றவை நல்லது. தேன், பனங்கற்கண்டு போன்ற சத்துகள் மிக்க இனிப்புகளைக் குழந்தைக்கு கொடுக்கத் தவறுகிறோம். ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்க வேண்டும்.

பல்வேறு வேதிப்பொருட்களால் கழுவி, சுத்தம் செய்து, பாலிஷ் போட்டு பளிச் வெள்ளை நிறத்தில் வரும் சர்க்கரையும் அவற்றால் தயாரித்த இனிப்புகளையும் குழந்தைக்கு கொடுப்பதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வருகிறது.

முக்கியமாக, இயற்கையாக கிடைக்கும் கடல் உப்பை – கல்லுப்பை விட்டு விட்டு தூள் (டேபிள் சால்ட்) உப்பில் சமைத்து குழந்தைகளுக்கு தருகிறோம்.

இந்த தூள் உப்பை வெண்மையாக்க பல பிராசஸிங் செய்யப்படுகிறது. அயோடின் குறைபாடு ஏற்பட்டு, தைராய்டு பாதிப்புக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.

மேலும், மினரல் வாட்டர் குடிப்பதால் கால்சியம், சோடியம், பொட்டாசியம் குறைபாடும் வருகிறது.

கைக்குத்தல் அரிசி, அவல் போன்றவற்றை குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும். இதைத் தவிர்த்து வெள்ளை அரிசியை சாப்பிடும் குழந்தைகளுக்கு விட்டமின் பி12 குறைபாடு அதிகரிக்கிறது.

இதையும் படிக்க : 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி

கடைகளில் விற்கும் சுத்தம் இல்லாத தயிர், மோர் குழந்தைகளுக்கு கொடுப்பதால் குழந்தைகளின் வயிறு பாதித்து கழிச்சல் பிரச்னையும் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

எப்படி உங்கள் குழந்தை நோஞ்சானாக உள்ளது எனக் கண்டுபிடிப்பது?

இதோ அதற்கான அறிகுறிகள்…

#1. எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.

#2. அடிக்கடி தலை சுற்றுகிறது என சொல்கிறார்களா எனக் கவனியுங்கள்.

#3. அடிக்கடி காய்ச்சல், சளி பிரச்னை

#4. அடிக்கடி கழிச்சல் பிரச்னை

#5. ஈறுகள் வீக்கமடைதல்

#6. ஈறுகளில் ரத்தம் கசிதல்

#7. சொத்தைப் பற்கள்

#8. குறைவான எடை இருக்கிறார்களா எனக் கவனியுங்கள்.

#9. உடல் வளர்ச்சியின்மை சீராக இருக்காது

#10. தளர்ந்து, ஒட்டிபோன சதை

#11. ஊதிய வயிறு

#12. அடிக்கடி எலும்பு முறிவு

#13. குறைவாகவோ கூடுதலாகவோ நாடித்துடிப்பு இருப்பது

#14. கல்வி கற்பதில் குறைபாடு

#15. குறைப்பிரசவ குழந்தை

இந்த அடையாளங்கள் எல்லாம் நோஞ்சான் குழந்தைகள் என வகைப்படுத்தப்படும்.

இதையும் படிக்க : உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

babies signs warnings

Image Source : word from the well

கர்ப்பிணிகள் செய்த தவறுகளாலும் குழந்தை நோஞ்சானாக மாறுகிறது?

ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொண்டது

எடை குறைவான குழந்தையைப் பெற்றெடுப்பது

வளர்ச்சி அடையாத குழந்தையைப் பெற்றெடுப்பது

நோஞ்சான் குழந்தைகளை எப்படி பாதுகாத்து வளர்ப்பது?

குழந்தையின் உடல் எடை அலகு (BMI) மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை கணக்கிட முடியும்.

ஊட்டச்சத்து குறைபாடை கண்டறியலாம்.

ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.

தேவையான ஊட்டச்சத்தை உணவுகள் மூலமாகவோ, மருந்தாகவோ குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குச்சி, பல்பம், சாம்பல், விபூதி போன்றவற்றை குழந்தைகள் உண்டால் அவர்களை அவசியம் கவனிக்கவும். மருத்துவரிடம் காண்பிக்கவும்.

குழந்தை சாப்பிட ஏற்றதுபோல சத்தான உணவுகளை, சுவையாக செய்து கொடுக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் உண்ணும் உணவுகளைச் சத்தானதாக தேர்வு செய்து சாப்பிடுங்கள். அதையே குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

இதையும் படிக்க : குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

Source : ஆயுஷ் குழந்தைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

tamiltips

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறதா?காரணங்கள் & தீர்வுகள்

tamiltips

0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

tamiltips

ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

tamiltips

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips

கொசு கடி காயத்தை நீக்கும் 5 வீட்டு வைத்தியம்

tamiltips