Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன.

அவற்றைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளை இந்த மலச்சிக்கல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

0-6 மாத குழந்தைகள்… 

தாய்ப்பாலை முறையான இடைவேளியில் சரியாக கொடுத்தாலே மலச்சிக்கல் தொந்தரவு வராது.

இதனுடன் பாலூட்டும் தாய், கீரைகள், பூண்டு, காய்கறி, பழங்கள், கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பருப்பு – பயறு வகைகள் போன்ற நல்ல தரமான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம்.

இப்படி முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வரும் தாய்மார்கள் பாலூட்டி வந்தாலே குழந்தைக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.

Thirukkural

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் தொந்தரவுகளை நீக்கும் வழிகள்… 

  • பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் சரியாக இருக்க வேண்டும்.
  • தாயின் மனநிலை, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முக்கியம்.
  • குழந்தை பாதுகாப்பான உணர்வை உணர்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
  • தாயின் அரவணைப்பும் அன்பும் மிகவும் முக்கியம்.
  • ரப்பர் மேட்டில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது.

மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்திய முறைகள்

#1. திராட்சை சாறு

dry grapes for babies

  • பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை – 8, எடுத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரம் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவவும்.
  • பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இந்த 8 திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
  • திராட்சைகள் நன்கு ஊறி, பாதி வெந்து விடும்.
  • பின்னர், இந்த திராட்சைகளையும் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மத்தால் நன்கு மசித்து சாறு எடுக்கவும்.
  • இந்த சாறை வடிகட்டி, தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.

இதையும் படிக்க: பஞ்சமூட்டக்கஞ்சி… குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் வீட்டு மருத்துவம்…

#2. இளஞ்சூடான தண்ணீர் மேஜிக்

  • குழந்தைகளுக்கு எப்போதுமே இளஞ்சூடான தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
  • ஜூஸ் கொடுத்தாலும் அதில் இளஞ்சூடான தண்ணீரைக் கலப்பது நல்லது.
  • போதுமான அளவு குழந்தைக்கு தண்ணீர் தருகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

#3. வாழைப்பழ கூழ்

  • வாழைப்பழத்தைக் கரண்டியால் நன்கு மசித்து கூழாக்கி அதில் டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம். தினமும் ½ கப் அளவுக்கு இதைக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் நீங்கிவிடும்.

#4. சப்போட்டா கூழ்

chikoo for babies

  • சப்போட்டாவை பாதியாக அறிந்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, ஸ்பூனால் அதன் சதைப்பகுதியை எடுத்து ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் இருக்காது.

இதையும் படிக்க: ஃபார்முலா மில்க் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

#5. உலர்திராட்சை டானிக்

  • உலர்திராட்சை – 15, எடுத்துக் கொள்ளவும்.
  • நன்கு கழுவி விடவும்.
  • அரை டம்ளர் வெந்நீரில் உலர்திராட்சை 4 மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடவும்.
  • ஊறியதும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை நன்கு வடிகட்டி, குழந்தைக்கு கொடுக்கவும்.
  • இதைத் தொடர்ந்து செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.

#6. இளஞ்சூடான ஒத்தடம்

  • ஒத்தடம் பேக்கில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அதைக் குழந்தைகளின் வயிற்று, முதுகு பகுதியில் ஒத்தி ஒத்தி ஒத்தடம் கொடுப்பது போல செய்யுங்கள்.
  • இதனாலும் மலச்சிக்கல் தொந்தரவு நீங்கும்.

#7. பப்பாளி கூழ்

  • பப்பாளி கூழ் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் நீங்கிவிடும்.

#8. கொய்யா ஜூஸ்

guava juice for babies

  • கொய்யா பழத்தை சிறிது சிறிதாக அறிந்து, விதை நீக்கி, ஜூஸ்home  எடுத்து வடிகட்டி ½ டம்ளர் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

#9. இஞ்சி டிரிங்க்

  • ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து அரை டம்ளர் இளஞ்சூடான நீரில் கலந்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
  • இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#10. ஆப்பிள்

  • ஆப்பிளை நன்கு கழுவித் தோலை நீக்கி கொள்ளுங்கள்.
  • ஆப்பிளை துண்டு துண்டாக அறிந்து கூழாக்கி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் டேட்ஸ் சிரப் கலந்து குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

tamiltips

0-12 மாத குழந்தைகளுக்கு தரவே கூடாத 9 உணவுகள்…

tamiltips

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

tamiltips

மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்…

tamiltips