Tamil Tips
Love & Romance

பெண்ணின் மனதை கவரும் வழிமுறைகள்

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம்.

இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்: கவர முயற்சிக்க வேண்டாம் இது என்ன விளையாட்டு? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது.

நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும்.

பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம். நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும்.

Thirukkural

பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள் பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர்.

நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. புதிதாக சிந்தியுங்கள் பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர்.

அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.

பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். தோற்றம் முக்கியம் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.

சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை.

சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களின் மன ஆழம் பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.

ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.

இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்களுக்காக மட்டும்! தமிழ் பையனை எப்படி காதலிக்க வைப்பது?

tamiltips

இத மட்டும் செஞ்சா உங்க Ex Lover திரும்பவும் உங்கள Love பண்ண கெஞ்சுவாங்க?

tamiltips

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

tamiltips

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

tamiltips

பெண் மனம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்ன தெரியுமா?

tamiltips