Tamil Tips
கர்ப்பம் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

பிரசவத்திற்குப் பிறகு ஓமம் நீர்க் குடிப்பதால் கிடைக்கும் 10 பலன்கள்

ஓமம் நீர் ஒரு வரப்பிரசாதம் (Ajwain water is a boon)

ஓமத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.சித்த வைத்தியத்தில் ஓமத்திற்கு என்றே தனி இடம் உள்ளது.ஓமம் நீரின் பலன்கள்  எண்ணில் அடங்காதவை. அதில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும் பண்பைக் கூறலாம்.பிரசவத்திற்குப் பின் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவள் இயல்பான வாழ்க்கை முறைக்கு மீண்டும் திரும்புவது அவ்வளவு இலகுவானது இல்லை.அவள் தனது உடலை மீண்டும் தினசரி வேலைகளைப் பார்க்கக் கூடிய அளவில்  பழக்கப்படுத்தி தன் ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க சில மாதங்கள் ஆகும்.

மேலும் உடல் எடை அதிகரிப்பதால் சில தேவையற்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இதனால் அந்தப் பெண்ணால் இயல்பான வாழ்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாகச் சுறுசுறுப்பாக வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் போவது, வேகமாக நடக்க இயலாமல் போவது, மாடிப் படிகள் ஏறுவதில் சிரமம் ஏற்படுவது, நீரழிவு நோய்ப் பாதிப்பு ஏற்படக் கூடிய அநேக சாத்தியங்கள் ஏற்படுவது, அதிக இரத்த அழுத்தம் ஏற்படுவது என்று பல பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய உடல் உபாதைகளுக்கான சாத்தியங்களிலிருந்து விடுபடவும், உடல் எடையைக் குறைத்து மீண்டும் பெண்கள் தங்களின் அழகிய தோற்றத்தைப் பெறவும், ஒரு எளிதான வீட்டு வைத்தியம் உள்ளது. அது வேறொன்றும் இல்லை,அற்புதமான ஓமம் நீர் தான்.

ஓமம் நீர்த் தயாரிக்கும் முறை (Prepation of Ajwain water)

இந்த ஓமம் நீரை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரித்து விடலாம். ஒரு குவளை நீரில் சிறிது ஓமம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டுச் சூடு சற்று குறைந்ததும் வடிகட்டிப் பருகினால் நல்ல பலனை நீங்கள் விரைவாகப் பெறலாம். இதனை அதிகம் வெறும் வயிற்றிலும் இரவு உணவிற்கு பிறகும் பருகி வருவது அதீத நல்ல பலனைத் தரும்

Thirukkural

பிரசவத்திற்குப் பின் ஓமம் நீர்ப் பருகுவதால் கிடைக்கும் 10 பலன்கள் (10 Benefits of Ajwain Water after Delivery in Tamil)

மேலும் நீங்கள் அறிந்து கொண்டு நன்மை அடைய, பிரசவத்திற்குப் பின் ஓமம் நீரினைப் பயன்படுத்துவதால் ஏற்படும் 10 பலன்கள்  பின் வருமாறு:

அதிக உடல் எடையைக் குறைக்கும் (Reduce overweight)

முன்னரே சொன்னது போல அனைத்து குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உள்ளது. அது உடல் எடை அதிகரிப்பது தான். குழந்தை பிறந்த பிறகும் ஒரு பெண் தான் அழகாகவும் நல்ல உடல்வாகோடும் தோன்ற வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. எனினும் அதிக பெண்கள் தங்களது உடலின் அழகிய மற்றும் ஒல்லியான உடல் தோற்றத்தைப் பிரசவத்திற்குப் பின் இழந்து விடுகிறார்கள். இது இயல்பே என்றாலும், பலர் அத்தகைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருப்பார்கள்.பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். சத்தான உணவோடும், போதிய உடற்பயிற்சியோடும் நீங்கள் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை நிச்சயம் குறையும்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் (Increase breastmilk)

பிரசவத்திற்குப் பின் பெண்கள் ஓமம் நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடியும்.ஓமம் இயற்கையான வழியில் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவுகிறது.

உடல் வலியைப் போக்கும் (Reduce body pain)

ஓமம் நீர் உங்கள் உடல் வலியைக் குறைக்க உதவும். குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் அதிக பட்சமான உடல் வலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட  நேரிடும்.எத்தனையோ மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலி கூட ஓமம் நீருக்கு அடங்குகிறது என்பது மிகையல்ல.ஆக இந்த ஓமம் நீரைப் பருகி வந்தால் உங்கள் உடல் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் (Increase immunity)

ஓமம் நீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் விரைவில் முழுத் தெம்பைப் பெறும்.கூடுதலாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் சளி, சுரம் போன்ற எந்த உபாதைகளும் தாய் மற்றும் சேய்க்கு வராது தடுக்கப்படுகின்றன.நீங்கள் தொற்று வியாதிகளிலிருந்து தப்பிக்க ஓமம் நீர் அருந்துவது ஒரு எளிய மட்டும் சிறந்த வழி!

வாய்வுத் தொல்லை நிவர்த்தியாகும் (Cure gas trouble)

பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு.ஆக இந்த ஓமம் நீரைப் பருகும் போது அத்தகைய வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும்.ஏன் பெண்களுக்கு மட்டும் அல்ல,குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புத் தொல்லைகளும் இந்நீரால் நிவர்த்தி செய்யப் படுகிறது.

மலச்சிக்கல் நீங்கும் (Cure constipation)

பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் மலச் சிக்கல் அல்லது பேதி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க இந்த ஓமம் நீர் பெரிதும் உதவுகிறது.இவ்வகை  உடல்நிலை சீர்க் கேடுகளை நீங்கள் மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகியே சரி செய்து விடலாம். இதை விட ஒரு நல்ல வீட்டு வைத்தியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

மாதவிடாய் பிரச்சனைகள் தீரும் (Regularise menstruation)

பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய் தொந்தரவு இருக்கிறது. குறிப்பாகப் பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஏற்படுவதில்லை.இதற்காக அவர்கள் பல மாத்திரைகளை உண்டு பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.அவர்கள் அனைவரும் இந்த ஓமம் நீரின் அருமை பெருமைகளைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.சீரான மாதவிடாய் ஏற்பட  இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. இந்த ஓமம் நீரைத் தொடர்ந்து பருகி வர அனைத்து மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

செரிமான தொல்லை நீங்கும் (Improves digestion)

சரியாகச் செரிமானம் ஆகாததால்,ஒரு சிலருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் படாமல் போக வாய்ப்புள்ளது.அந்த சமயத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் பட வழி வகை செய்ய, இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. ஆக நீங்கள் இந்த நீரைத் தினமும் பருகி வரும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பூரணமாகக் குணமாகும்.

உடல் வலிமைப் பெறும் (Boost body power)

ஓமம் நீர் இருதய பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும். சில பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் உடல் பலவீனமாவதால் இருதயத்தில் சிறு வலி அல்லது சுவாச பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த ஓமம் நீர் அதனைச் சரி செய்ய உதவுகிறது.ஓமம் நீர் இருதயத்தை வலுப்படுத்தி,சுவாசக் கோளாறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்கின்றது.

வாய்த் துர்நாற்றத்தைப் போக்கும் (Cure bad mouth odour)

ஓமம் நீரைத் தினம் பருகி வர,வாய்த் துர்நாற்றம் சரியாகும்.பற்கள் மற்றும் நாக்கு பகுதிகளில் படிந்திருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வாய் தூய்மை அடையும். என்ன ஓமம் நீரின் அளப்பரிய பலன்களை அறிந்து கொண்டீர்களா? அப்புறம் என்ன? இந்த அற்புதமான ஓமம் நீரைப் பயன்படுத்தி உங்களின் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காணுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்?

tamiltips

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

tamiltips

கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

tamiltips

குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

tamiltips

குதிகால் வெடிப்பு சரியாக வீட்டு வைத்திய குறிப்புகள்

tamiltips

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க 10 சிறந்த வழிகள்!

tamiltips