கொ
ரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் கூட கொரோனா வின் தாக்கம் தொடரும் என்று மருத்துவர்கள் சிலர் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக உணவு பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ,பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும் என்று அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் சாய் சதீஷ் கூறியுள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் சிறிது உடல் சோர்வுடன் காணப்படுவது வழக்கம். அது போன்ற உடல் அசதிகளில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சித்த மருந்துகளில் சிறந்த மருந்துகளான ஆடா தொடை குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோன்று உளுந்து கஞ்சியை காலை மாலை என இரண்டு வேலையும் எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் வலு ஏற்படும். அது மட்டுமல்லாமல் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். பழவகைகளில் மாதுளை, அத்தி சப்போட்டா பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.