ஆகவே அப்போது சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல சத்துக்களை உள்ளடக்கிய சேனைக்கிழங்கை, கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதை சேனைக்கடி என்று கூறுவார்கள்.
தேவையான பொருட்கள்
தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம்
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1/2 கப்
இஞ்சி – சிறிதளவு (தோல் நீக்கி சீவி வைத்துக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்கத் தேவையான பொருட்கள்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை: சேனையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் சேனையை தண்ணீரில் நன்கு கழுவிப் போடவும். புளி கரைசலை அதில் விட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் (சேனை நன்கு வெந்து இருக்க வேண்டும்). துவரம் பருப்பை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வெந்த சேனையையும், துவரம் பருப்பையும் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது, இஞ்சி, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவலும், துவரம் பருப்பும் சேர்ப்பதால் நன்கு சேர்ந்து கூட்டு மாறி இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஒரு கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தப்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டவும் சுவையான சேனை கடி ரெடி. சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். புளிக்குப் பதில் எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, கடைசியாக எலுமிச்சை சாறு பிழிய வேண்டும்.