Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சுண்டைக்காய்தானே என்று ஒதுக்காதீர்கள். எவ்வளோ மருத்துவப் பயன் இருக்குது தெரியுமா?

சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று கூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய்.

தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காயின் குணங்கள்:

1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.

Thirukkural

3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.

4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.

5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், கூடவும், இது உதவும்.

6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.

7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.

8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

9. சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.

10. சுண்டைக்காய் குழம்பு, எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும், மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.

மருத்துவ குணங்கள்:

1) உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.

2) சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.

3) வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

4) சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து, ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

5) வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.

6) பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படுமென்பது பெண்களுக்கு நல்லது.

7) பக்கவாதம் பாதித்தவர்களுக்குக்கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் .

எனவே சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனைவியுடனான உடலுறவின் போது வேறு பெண்களை பற்றி நினைக்கிறீர்களா? அப்போ நீங்க இத படிங்க முதல்ல!

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

tamiltips

கொள்ளு சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! இது உண்மையா ??

tamiltips

இந்தியாவில் பப்ஜி விளையாட தடையா ? அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!

tamiltips