வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க இந்த எண்ணெயை தேய்த்து செய்து பாருங்கள். ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்.
முதலில் ஆலிவ் எண்ணெய்யை கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் வேகமாக முடி வளரும்.
முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை… தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் கருஞ்ஜீரக எண்ணெய் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் முதலில் மேற்சொன்ன எல்லா எண்ணெய்களையும் ஒன்றன் பின் ஒன்றான நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை இறுதியில் கலந்து முடியின் வேர்களில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி சட்டென வளரும்.