Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எந்த அரிசியிலும் இல்லாத அதிக சத்துக்களை கொண்டது இந்த அரிசி!!

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல் சிவப்பு அரிசிக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் – எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து – சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.

சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாசு(ஸ்)டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்தால் நோய் எட்டிப் போகுமா? சூப்பர் விளக்கம்

tamiltips

தலையணை இல்லாமல் தூங்குவதால் எத்தனை நன்மைகள் கிடைக்கிறதென பாருங்கள்!

tamiltips

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

tamiltips

பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

tamiltips

கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

tamiltips

பிஞ்சு கத்திரிக்காவா பார்த்து சாப்பிட்டா கொழுப்பைக் கரைக்கலாம் !!

tamiltips