பொதுவாக. யாருக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பார்க்கலாம்.
· 20 வயதுக்குள் கர்ப்பம் அடைபவர்களுக்கும் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்களுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
· முதல் குழந்தை பெற்ற இரண்டு ஆண்டுக்குள் அடுத்த குழந்தைக்கு தாயாகும் பெண்களுக்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
· உடல் பருமன் உள்ள பெண்களுக்கு கர்ப்பத்திற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் உயர் ரத்தஅழுத்தம் வரலாம்.
· நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமப்பவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
பெரும்பாலானவ்ர்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்பகாலங்களில் உயர் ரத்தஅழுத்த பாதிப்பு தென்படுவதில்லை. 20வது வாரத்தில் இருந்து இந்த பாதிப்பு தென்படுகிறது. இதனை கண்டறிந்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால் தாய்க்கும் குழந்தைக்கும் பெரிய பாதிப்பு உண்டாகும்.