Tamil Tips
செய்திகள் ட்ரெண்டிங் செய்திகள்

Viral video – படகு விபத்தில் நீருக்குள் மூழ்கும் சிறுவனை மீட்க போராடிய ஊர் மக்கள், மனதை உருக வைக்கும் காட்சி!

கிழக்கு இலங்கையில் உள்ள குறிஞ்சகேனி நகரில் இருந்து கின்னியா நகரை நோக்கி 23 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

படகு விபத்து தொடர்பாக மனதை உருக்கும் செய்தியொன்று வெளிவந்துள்ளது. முதியவரொருவர் தனது பேரனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக படகுப் பாதையில் ஏறியிருந்தார்.

பாதை கரையை அடைவதற்கு சொற்ப தூரமே இருந்தது. இரண்டாம் வகுப்பில் படிக்கும் தனது பேரனை பாடசாலைக்கு கூட்டி வந்து கொண்டிருந்தார்.

Thirukkural

பாதை தண்ணீரில் மூழ்கி, புரண்டு கொண்டிருக்கையில் தன்னையும் பொருட்படுத்தாமல் பேரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நீச்சலடித்தார்.

அதற்குள் பாதை புரண்டதை கண்ட பலரும் தண்ணீரில் குதித்து மூழ்கியிருப்பவர்களை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் ஓர் இளைஞன் முதியவரிடமிருந்து சிறுவனை வாங்கிக் கொண்டு கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

நீரின் ஆழத்தில் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் முதியவர் திணறினார். பலரும் ஒரொவரையொருவர் காப்பாற்ற மேற்கொண்ட பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

இச்சம்பவம் பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய நபர்! பின்பக்கத்தில் உள்ள இடத்தை தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்.. புகைப்படங்கள்

tamiltips

Viral Video: பாம்பின் உதட்டில் முத்தமிட்ட இளம்பெண் வீடியோ!!!

tamiltips

10th தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை அரசு கொடுக்கும் உதவித்தொகை பற்றி தெரியுமா?

tamiltips

எது Aliens-ஆ…!?- இந்த வைரல் வீடியோவைப் பார்த்தீங்களா..?

tamiltips

பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் வந்த பிரபல நடிகர் !! யார் தெரியுமா இவர் ?? அட இந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா ??

tamiltips

Viral Video – சிறுமியுடன் உடற்பயிற்சி செய்யும் நாய்!! அந்த வீடியோ வைரலானது

tamiltips